Latest News :

சமுத்திரக்கனி தான் ‘மதுரவீரன்’ - இயக்குநர் பி.ஜி.முத்தையா பேட்டி!
Monday January-29 2018

விஜயகாந்தின் இளையமகன் சண்முகபாண்டியன் ஹீரோவாக நடிக்கும் ‘மதுரவீரன்’ விரைவில் வெளியாக உள்ள நிலையில், படம் குறித்து இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான பி.ஜி.முத்தையா நம்மிடம் பகிர்ந்துக் கொண்டது இதோ,

 

நான் ஒளிப்பதிவாளராக பல படங்களில் பணியாற்றியுள்ளேன். முதலில் ஓரு படம் இயக்க வேண்டும் என்று எண்ணிய போது நமக்கு தெரிந்த அல்லது நமது வாழ்கையில் இருந்து எடுத்தால் சரியாக இருக்கும் என்பதால் தான் ’மதுரவீரன்’ கதை உருவானது. இப்படம் ஜல்லிக்கட்டு பற்றிய படம் மட்டும் அல்ல அதன் பின்பு நிகழும் அரசியலையும் மையப்படுத்தியே திரைக்கதை அமைந்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் இப்படத்தில் ஹீரோ என்றால் நல்லது மட்டுமே செய்வது போன்றும் வில்லன் என்றால் கெட்டது மட்டுமே செய்வது போன்றும் காட்சிகள் படத்தில் இல்லை. இப்படத்தில் உள்ள அனைத்து கதாபாத்திரங்களும் சராசரி மனிதர்களைப் போலவே இருக்கும். அனைத்து கதாபாத்திரங்களின் பின்னணியிலும் ஓரு நியாயமான காரணங்களுக்காக குரல் கொடுக்கும் காட்சிகள் தான் உண்டு. படத்தை பார்க்கும்போது அவரவர்கள் முன்வைக்கும் காரணங்களும் , வாதங்களும் நியாயமானதாக  இருக்கும். இப்படத்தில் வரும் கிளைமாக்ஸ் காட்சியின் முடிவுகளும் சரியான முடிவாக இருக்கும். 

 

இப்படம் மற்ற படங்களை காட்டிலும் வேறுபட்டு இருக்கும். ஜல்லிக்கட்டு பற்றிய படம் என்றால் ஹீரோ மாட்டை அடக்குவது போன்ற காட்சிகள் எல்லாம் படத்தில் வைக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. இப்படத்திலும் அந்த மாதிரியான காட்சிகள் இல்லை. படத்தில் நிகழும் அணைத்து பிரச்சினைகளை குறித்தும் சொல்லி கொண்டு வரும்போது கிளைமாக்ஸ் காட்சியில் ஹீரோ நீண்ட வசனங்களை கூறியவுடன் வில்லன்கள் கத்தியை கீழே போட்டுக்கொண்டு போவது போன்ற காட்சிகள் எல்லாம் கிடையாது. யதார்த்தமான காட்சிகள் மட்டுமே படத்தில் உண்டு. 

இப்படம் உண்மையான சம்பவங்களின் அடிப்படையை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 

 

படத்தில் வரும் சிறிய பீரியட் பிளாஷ் பேக் காட்சியில் அந்த பகுதியில் உள்ள உண்மையான பிரபலமான மாடுபிடி வீரர்களின் பெயர்களும் அந்த பகுதியில் உள்ள பிரபலமான மாடுபிடி வீரர்களையும் படத்தில் பயன்படுத்தியுள்ளோம். இப்படத்தின் ஹீரோ மதுரையை பின்புலமாக கொண்டவனாகவும், வயது 20 அல்லது  23 வயதை கொண்டவன்  போலவும் ஓரு சபையில் 100 , 1000  பேர்கள் முன்பு எழுந்து குரல் கொடுக்கும் போதும் மற்ற அனைவரும் அமைதியாக அவன் பேசுவதை கேட்க வேண்டும் அப்படி ஒருத்தனாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் சண்முக பாண்டியனை தேர்வு செய்தோம். அவரும் தன் அப்பா அரசியலில் மிகப்பெரிய பின்புலம் கொண்டவர் மிக பெரிய ஸ்டாரின் பையன் என்ற ஓரு சிறிய சலனம் கூட நான் அவரிடம் காணவில்லை. நானும் அப்படி நினைத்துக்கொண்டு அவரிடம் கதையை கூறவில்லை. 

 

கேப்டன் பற்றி நமக்கு எல்லாம் தெரியும் பிரேமலதா மேடம் படத்தின் இசையமைப்பாளர் யார், எடிட்டர் யார் என்றெல்லாம் கேட்டார்கள். ஆனால் கேப்டன் படத்தின் ஸ்டன்ட் மாஸ்டர் யார் என்று தான் கேட்டார். அந்த அளவுக்கு சண்டை காட்சிகளில் தீவிரமாக இருந்தார். சண்முக பாண்டியனும் சண்டைகாட்சிகளில் மிக சிறப்பாக நடித்துள்ளார். சண்முக பாண்டியனின் உயரம் 6.3 அடி இருக்கலாம். படத்தில் ஹீரோவிற்கு அருகில் நிற்கும்போது குறைந்த 6 அடி உயரம் இருக்க வேண்டும், ஓரு 18 முதல் 20 வயதுடைய மதுரையை சார்ந்த ஓரு பெண்ணாக இருக்க வேண்டும் என்றும் படத்தில் ஹீரோயின் காட்சிகள் மிகவும் குறைவாகத்தான் உள்ளது. எனவே புதுமுகமாக இருந்தால் போதுமானதாக இருக்கும் என்று தான் தேர்வு செய்தோம். 

 

படத்தில் ‘மதுரவீரன்’ சமுத்திரகனி தான். படத்தில் அவருடைய கேரக்டர் ’ரத்னவேலு’, அவர் தான் மதுரவீரன் கதாபாத்திரம். சண்முக பாண்டியனின் தந்தை கதாபாத்திரம். ரத்னவேலு கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க 3 நடிகர்களை நான் எண்ணி இருந்தேன் முதலாவதாக ராஜ்கிரண் , இரண்டவதாக சத்யராஜ், மூன்றாவதாக தான் சமுத்திரகனி. படத்தின் ஹீரோவின் வயதை வைத்து ரத்னவேலு கதாபாத்திரம் முடிவு ஹீரோ குறைவான வயது என்பதால் சமுத்திரகனியை தேர்வு செய்தோம். படத்தின் மிக முக்கியமான மிக வலுவான கதாபாத்திரம் அவருடையது.  

படத்தில் வரும் பாடல்கள் மிக சிறப்பாகவும் பாடல்களின் வரிகள் அனைவருக்கும் பிடிக்கும் வகையிலும், புரியும் வகையிலும் இருக்க வேண்டும் என்று பேசியே வேலை செய்தோம். சந்தோஷ் தயாநிதி மிகவும் சிறப்பாக இசையமைத்துள்ளார். படத்தை ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு முன்பே கதை உருவாக்கிவிட்டோம். ஆனால் ஜல்லிக்கட்டு போராட்டம் பற்றிய சிறிய தொகுப்பு படத்தில் உள்ளது., என்றார்.

Related News

1874

’டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ் 2’ புத்தகம் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற திரை பிரபலங்கள்
Thursday July-03 2025

தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...

பெரிய டங்களில் சட்ட விரோத செயல்கள் தான் பெரிதாகக் காட்டப்படுகின்றன - ’மகேஸ்வரன் மகிமை’ பட விழாவில் கே.ராஜன் பேச்சு
Tuesday July-01 2025

எஸ்பிஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் ’மகேஸ்வரன் மகிமை’...

’தேசிங்குராஜா 2’-வின் வெற்றிக்கு விமல் தான் முக்கிய காரணமாக இருக்கப் போகிறார் - இயக்குநர் எழில் உறுதி
Tuesday July-01 2025

நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...

Recent Gallery