’மதுர சம்பவம்’, ’தொப்பி’, ‘சிகப்பு எனக்கு பிடிக்கும்’ உள்ளிட்ட பல படங்களை இயக்கிய யுரேகா, தனது அடுத்த படத்திற்கு ‘காட்டுபய சார் இந்த காளி’ என்று தலைப்பு வைத்துள்ளார்.
ஒயிட் ஹார்ஸ் சினிமாஸ் நிறுவனத்துடன் யுரேகா சினிமா ஸ்கூல் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் ஹீரோவாக ஜெய்வந்த் நடிக்கிறார். மற்றும் ஜரா, ஆடுகளம் நரேன், மூணாறு ரமேஷ், மாரிமுத்து, சி.வி.குமார், அபிஷேக், யோகி தேவராஜ், எமி, ஆர்.ரத்தினகுமார், டேவிட், காமாட்சி மோகன், அம்மா கணக்கு விக்கி, முத்தையா கண்ணதாசன், மதன், அஸ்மிதா ஆகியோர் நடிக்கிறார்கள்.
விஜய் சங்கர் இசையமைக்கும் இப்படத்திற்கு மணி பெருமாள் ஒளிப்பதிவு செய்கிறார். வில்சி எடிட்டிங் செய்ய, மோகன மகேந்திரன் கலையை நிர்மாணிக்கிறார். பிரபு சந்திரசேகர் சண்டைப்பயிற்சியை மேற்கொள்ள, பூபதி நடனம் அமைக்கிறார். பிறைசூடன், யுகபாரதி, யுரேகா ஆகியோர் பாடல்கள் எழுதுகிறார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...