‘பலூன்’ படத்திற்கு பிறகு ஜெய் நடிக்கும் படத்திற்கு ‘ஜருகண்டி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. வெங்கட் பிரவிடம் இணை இயக்குநராக பணியாற்றிய பிச்சுமணி இயக்கும் இப்படத்தை நடிகர் நிதின் சத்யா மற்றும் பத்ரி கஸ்தூரி ஆகியோர் தயாரிக்கிறார்கள்.
விறுவிறுப்பான படப்பிடிப்பில் இருக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லும் போஸ்டரை நேற்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டார். வெளியிட்ட சில மணி நேரங்களில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதால் படக்குழுவினர் குஷி அடைந்துள்ளார்கள்.
இது குறித்து கூறிய நிதின் சத்யா, “நல்ல படங்களை என்றுமே பாராட்டி ஆதரவு தரும் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்கள் எங்கள் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருப்பதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. எங்கள் படத்தின் 90 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. ஒரு தயாரிப்பாளராக இப்படத்தை தயாரிப்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன்.” என்று தெரிவித்தார்.
இப்படத்தின் ஜெய்க்கு ஜோடியாக ரேபா மோனிகா ஜான் நடிக்கின்றார். ரோபோ ஷங்கர், டேனி அருண், ஜெயக்குமார், போஸ் வெங்கட் மற்றும் இளவரசு ஆகியோர் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவில், போபோ சஷியின் இசையில், பிரவீன் கே.எல் படத்தொகுப்பில், ரேமியன் கலை இயக்கத்தில், டான் அசோக்கின் ஸ்டண்ட் இயக்கத்தில் 'ஜருகண்டி' வருகின்றது.
அண்ணா புரொடக்ஷன்ஸ் சார்பில் வி...
ஸ்ரீ லட்சுமி ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் டாக்டர் ஆர்...
கிராண்ட் பிக்சர்ஸ் (Grand Pictures) நிறுவனத்தின் தயாரிப்பில், அப் 7 வெஞ்சர்ஸ் ஆதிராஜ் புருஷோத்தமன் இணைத் தயாரிப்பில், அபின் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகியுள்ள மெடிக்கல் கிரைம் த்ரில்லர் திரைப்படம் ’அதர்ஸ்’...