Latest News :

நிமிர்’ படத்தை பாராட்டும் பிரபல ஒளிப்பதிவாளர்கள்!
Tuesday January-30 2018

பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான ‘நிமிர்’ ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் உதயநிதி போட்டோகிராபர் வேடத்தில் நடித்திருப்பதால், சென்னையை சார்ந்த பிரபல புகைப்படக்கலைஞர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களுக்கு ஒரு பிரத்தியேக காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. படத்தை பார்த்த இவர்கள், படத்தையும் உதயநிதியின் கதாபாத்திரத்தையும் அவரது நடிப்பையும் மிகவும் ரசித்து  மனதார வாழ்த்தி பாராட்டியுள்ளனர். 

 

இதில் ஒளிப்பதிவாளர்கள் ஆர்.டி.ராஜசேகர், ராபர்ட், ஜி.பி.கிருஷ்ணா, பாலமுருகன், கார்த்திக் ராஜா. சி.ஜே.ரஜ்குமார், ஆர்ம்ஸ்ட்ராங், எஸ்.ஆர்.சதீஷ்குமார், கிச்சாஸ், பி.சி.ஸ்ரீராம் ஆகியோர் கலந்துக்கொண்டார்கள். இவர்களுக்கு பிரத்யேக நினைவு பரிசும் வழங்கப்பட்டன.

 

இது குறித்து இயக்குநர் பிரியதர்ஷன் பேசுகையில், “ஒளிப்பதிவில் ஜாம்பவானாக இருந்த வின்சென்ட் மாஸ்டர் அவர்கள் தான் எனது வாழ்வில் மிகப்பெரிய உந்துதலாக இருந்துள்ளார். அவரால்தான் எனக்கு புகைப்பட கலைஞர்கள் மீதும் ஒளிப்பதிவாளர்கள் மீதும் எனது மரியாதை மேலும் கூடியது. 'நிமிர்' படத்தை அவருக்கு சமர்ப்பிக்கிறேன். இந்த தருணத்தில், மண் வாசனையின் முக்கியத்துவத்தை எனக்கு உணர்த்திய இயக்குனர் பாரதிராஜாவிற்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்'' என்றார்.

Related News

1889

காதலர்களின் பெற்றோர்களை பற்றி எழுத தவறி விடுவோம் - இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் ஆதங்கம்
Friday October-31 2025

ஸ்ரீ லட்சுமி ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் டாக்டர் ஆர்...

”ஆதித்யா புதுமுகம் போல இல்லை” - நாயகனை பாராட்டிய கெளரி கிஷன்
Friday October-31 2025

கிராண்ட் பிக்சர்ஸ் (Grand Pictures) நிறுவனத்தின் தயாரிப்பில், அப் 7 வெஞ்சர்ஸ் ஆதிராஜ் புருஷோத்தமன் இணைத் தயாரிப்பில், அபின் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகியுள்ள மெடிக்கல் கிரைம் த்ரில்லர் திரைப்படம் ’அதர்ஸ்’...

Recent Gallery