நடிகரும் இயக்குநருமான பார்த்திபனின் மகள் கீர்த்தனாவுக்கு வரும் மார்ச் மாதம் 8 ஆம் தேதி திருமணம் நடைபெற இருக்கும் செய்தியை நேற்று வெளியிட்டிருந்தோம். ஆனால், மாப்பிள்ளை யார்? என்பது இதுவரை தெரியாமல் இருந்த நிலையில், இன்று அதுவும் தெரிந்துவிட்டது.
பிரபல படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்தின் மகன் அக்ஷன் அக்கினேனியை தான் கீர்த்தனா திருமணம் செய்துக்கொள்ளப் போகிறார். அக்ஷன் அக்கினேனி, கார்த்திக் சுப்புராஜின் ‘பீட்சா’ படத்தை இந்தியில் ரீமேக் செய்து இயக்கியுள்ளார்.
அக்ஷனும், கீர்த்தனாவும் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றி வந்தனர். அப்போது இவர்களுக்கிடையே காதல் மலர்ந்துள்ளது. இவர்களது காதலுக்கு, இவர்களது பெற்றோர் பச்சைக்கொடி காட்டியதை தொடர்ந்து, குடும்பத்தாரின் ஆசியோடு இந்த காதல் ஜோடி தம்பதிகளாகின்றார்கள்.
அண்ணா புரொடக்ஷன்ஸ் சார்பில் வி...
ஸ்ரீ லட்சுமி ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் டாக்டர் ஆர்...
கிராண்ட் பிக்சர்ஸ் (Grand Pictures) நிறுவனத்தின் தயாரிப்பில், அப் 7 வெஞ்சர்ஸ் ஆதிராஜ் புருஷோத்தமன் இணைத் தயாரிப்பில், அபின் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகியுள்ள மெடிக்கல் கிரைம் த்ரில்லர் திரைப்படம் ’அதர்ஸ்’...