ஸ்ரீ ராகவேந்தரின் தீவிர பக்தரான நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ், சென்னை அம்பத்தூரில் ராகவேந்தர் கோவில் கட்டியுள்ளது அனைவரும் அறிந்ததே.
இந்த கோவிலில் தினமும் விஷேச பூஜைகள் நடைபெற்று வரும் நிலையில், ஸ்ரீ ராகவெந்தர் ஜீவசமாதி அடைந்த 346 வது ஆண்டை முன்னிட்டு, அம்பத்தூர் ராகவேந்தர் கோவிலில் சிறப்பு ஆராதனையை லாரன்ஸ் நடத்தினார்.
தனது அம்மா, குடும்பத்தார் மற்றும் தனது டிரஸ்ட் மாணவர்களுடன் இணைந்து லாரன்ஸ், நடத்திய இந்த சிறப்பு ஆராதனை விழாவில், ஆயிரம் பேருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், ராஜுமுருகன் இயக்கத்தில், சசிகுமார் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ' மை லார்ட்' ( My Lord) திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது சமூக அக்கறை மிக்க ஒரு படைப்பாகவும், ரசிகர்களை ரசிக்க வைத்த படைப்பாகவும் பார்வையாளர்களிடமும், விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டுக்களைக் குவித்த இப்படம் திரையரங்குகளில் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது...
நவீன சைபர் குற்றத் த்ரில்லர் அம்சங்களையும், பாரம்பரிய உணர்வுகளையும் இணைக்கும் விதமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘அச்சுத அவதாரம்’...
கே. ஜே. பி டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் அஸ்வின் குமார் நடிப்பில் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் வழங்கும் 'ஹாட்ஸ்பாட் 2 ' திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது...