’தீரன் அதிகாரம் ஒன்று’ படத்திற்கு பிறகு பாண்டிராஜ் படத்தில் கார்த்தி நடித்து வருகிறார். ‘கடைக்குட்டி சிங்கம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது. சாயிஷா சைகல் ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தில் சத்யராஜ், சூரி, ஸ்ரீமன், ப்ரியா பவானி சங்கர், பானுப்ரியா, மெளனிகா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது. மேலும், படத்தின் டைடிலுக்கு கீழே கொடுக்கப்பட்டிருந்த ’பயிர் செய்ய விரும்பு’ என்ற வாசகமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இப்படத்தின் பெரும்பாலான காட்சிகல் படமாக்கப்பட்டுள்ள நிலையில், படத்தை வரும் ஏப்ரல் மாதம் வெளியிட படக்குழு தீவிரம் காட்டி வருகின்றனது.
இந்த நிலையில், சமீபத்தில் இப்படத்திற்காக பிரம்மாண்ட ரேக்ளா ரேஷ் போட்டி காட்சி படமாக்கப்பட்டது. இதை காண தனது மகனுடன் வந்த சூர்யா, அக்காட்சியை 4 நிமிடங்களுக்கு தனது செல்போனில் படம் பிடித்து, அதை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். வைரலாக பரவிய அந்த வீடியோவால் தான், தற்போது ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்திற்கு சிக்கல் எழுந்துள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்ட போது, மாடுகளை வைத்து நடத்தப்படும் ரேக்ளா ரேஷ் போட்டிக்கும் தடை விதிக்கப்பட்டது. தற்போது ஜல்லிக்கட்டு மீதான தடை நீங்கப்பட்டதை போல, ரேக்ளா ரேஷ் மீதும் தடை நீக்கப்பட்டு விட்டது. ஆனாலும், திரைப்படங்களுக்காக இதை காட்சி படுத்தும்போது, விலங்குகள் நல வாரியத்திடம் இருந்து உரிய அனுமதி கடிதம் பெற வேண்டும். ஆனால், கார்த்தி படத்திற்கு அந்த அனுமதி கடிதம் பெறாமலேயே ரேக்ளா ரேஷ் படமாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் மூலம், கடைக்குட்டி சிங்கம் படம் ரிலீஸின் போது, விலங்குகள் நலவாரியம் தடை விதிக்கும், என்று கூறப்படுகிறது.
ரிலாக்ரோ புரொடக்ஷன்ஸ் சார்பில் ஷாம்ஹுன் பிரமாண்டமாக தயாரிக்கும் திரைப்படம் ‘ஹிட்டன் கேமரா’ (HIDDEN CAMERA) அருண்ராஜ் பூத்தனல் இயக்கும் இப்படத்தில் ஜித்தன் ரமேஷ் நாயகனாக நடிக்கிறார்...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) மற்றும் வுண்டர்பார் பிலிம்ஸ் (Dawn Pictures) தயாரிப்பில், நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ‘இட்லி கடை’ திரைப்படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில், நேற்று சென்னனை, நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) மற்றும் வுண்டர்பார் பிலிம்ஸ் (Dawn Pictures) தயாரிப்பில், நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ‘இட்லி கடை’ திரைப்படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில், நேற்று சென்னனை, நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது...