‘சகாப்தம்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான விஜயகாந்தின் இளைமகன் சண்முகபாண்டியன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மதுரவீரன்’. ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா இயக்கியுள்ள இப்படத்தில் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஜல்லிக்கட்டு மற்றும் சென்னை மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படம் நாளை வெளியாகிறது.
இதற்கிடையே, நாளை தியேட்டர்களில் வெளியாகும் போதே, தயாரிப்பு தரப்பின் முறையான அனுமதியோடு இணையத்திலும் இப்படம் வெளியாவதாக இருந்தது. அதாவது, அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள மக்கள் இணையத்தில் பணம் கட்டி பார்க்கும் விதத்தில், இணையதளம் ஒன்று இப்படத்தை நாளை வெளியிடுவதாக அறிவித்திருந்தது. இந்த முயற்சிக்கு பலர் வரவேற்பு தெரிவித்ததோடு, தமிழ் சினிமாவின் மறுமலர்ச்சிக்கு இது தொடக்கமாக இருக்கும், என்றும் வாழ்த்தினார்கள்.
இந்த நிலையில், மதுரவீரன் படம் இணையத்தில் நாளை வெளியாகாது, என்று படத்தை வெளியிட இருந்த இணையதள நிறுவனம் திடீரென்று அறிவித்துள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
திரைய்ரங்கிலும் இணையத்திலும் ஒரே சமயத்தில் படம் வெளியாவதற்குத் திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால், இந்த முயற்சியை கைவிட்டதாகவும் அந்த இணையதள நிறுவனம் தெரிவித்துள்ளது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...