தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸில் கலந்துக்கொண்ட போட்டியாளர்கள் பலர் தற்போது பிஸியானவர்களாக வலம் வருகிறார்கள். இதில் பலருக்கு பல சினிமா வாய்ப்பு கிடைத்தாலும், சிலர் கடை திறப்பு, பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பு என்றும் பிஸியாக இருக்கிறார்கள்.
இதில் ஒருவரான வையாபுரி, தற்போது பல படங்களில் நடித்து வந்தாலும், இன்னும் தனக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை என்று பல இடங்களில் அவர் புலம்பி வருகிறார். வையாபுரி போனை எடுக்க மாட்டாரு, அவர் ரொம்ப பிஸியாக இருக்காரு, என்று பலர் சொல்லி வந்தாலும், அப்படி ஏதும் இல்லை, நான் என் வீட்டில் தான் இருக்கிறேன், ரொம்ப பிஸியாகவில்லை, சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வருகிறேன், என்று அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில், பிக் பாஸ் போட்டியில் கலந்துக்கொண்ட போது, அதில் பங்கேற்ற சக போட்டியாளர்கள், நிகழ்ச்சி முடிந்ததும், நாம் ஒன்றாக சில சுற்றுலா தளங்களுக்கு சென்று வரலாம் என்று சொன்னார்களாம். ஆனால், தற்போது அவர்களிடம் இருந்து வையாபுரிக்கு எந்த அழைப்பும் வரவில்லையாம். அவர் போன் செய்தாலும், யாரும் போனை எடுக்க மாட்ராங்களாம். இதனால் அவர் சற்று வருத்தமடைந்துள்ளதாகவும் கூறினார்.
அண்ணா புரொடக்ஷன்ஸ் சார்பில் வி...
ஸ்ரீ லட்சுமி ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் டாக்டர் ஆர்...
கிராண்ட் பிக்சர்ஸ் (Grand Pictures) நிறுவனத்தின் தயாரிப்பில், அப் 7 வெஞ்சர்ஸ் ஆதிராஜ் புருஷோத்தமன் இணைத் தயாரிப்பில், அபின் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகியுள்ள மெடிக்கல் கிரைம் த்ரில்லர் திரைப்படம் ’அதர்ஸ்’...