நடிப்பு தயாரிப்பு என்று இரட்டை குதிரை சவாரி செய்து வந்த விஷால், தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் மட்டும் இல்லாமல், தற்போது தமிழக அரசியலிலும் ஈடுபட்டிருப்பவர், பல குதிரை சவாரி செய்து வருகிறார்.
நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தின் பணிகள் ஏகப்பட்டது இருக்க, தனது தயாரிப்பு நிறுவனத்தின் பணியை மேனஜரின் பொருப்பில் விஷால் விட்டிருக்க, ‘பாண்டிய நாடு’ படத்திற்கு பிறகு விஷால் தயாரித்து நடித்த எந்த படமும் லாபம் ஈட்டவில்லையாம். கடசியாக வெளியான அவரது ‘துப்பறிவாளன்’ வெற்றிகரமாக ஓடினாலும், விஷாலுக்கு அதில் சிறு இழப்பீடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
படம் நல்லா ஓடினாலும் லாபம் வரவில்லையே என்று கவலையில் இருந்த விஷாலுக்கு, அவரது மேனஜர் அவரை ஏமாற்றியது ஒவ்வொன்றாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து கணக்கு பார்க்க உட்கார்ந்த விஷாலுக்கு பேரதிர்ச்சி காத்திருந்ததாம், லட்சம் அல்ல கோடிக்கணக்கில் மேனஜர் ஏமாற்றியதை கண்டுபிடித்தவர், அவரை கண்டித்து வெளியே அனுப்பிவிட்டார்.
இந்த நிலையில், நடிப்பு தயாரிப்பு என்று இரண்டையும் கவனித்துக்கொள்ள முடியாத விஷால், தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு ஓய்வு கொடுக்க முடிவு எடுத்துள்ளார். அதன்படி, தற்போது லிங்குசாமி இயக்கத்தில், தான் தயாரித்து நடித்து வரும் ‘சண்டக்கோழி 2’ படத்தோடு படம் தயாரிப்பதை நிறுத்த விஷால் முடிவு செய்துள்ளார்.
‘சண்டக்கோழி 2’ படத்திற்குப் பிறகு சொந்தமாக படம் தயாரிப்பதை நிறுத்திவிட்டு, வெளி தயாரிப்பாளர்களின் படங்களில் தொடர்ந்து நடிக்க விஷால் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அண்ணா புரொடக்ஷன்ஸ் சார்பில் வி...
ஸ்ரீ லட்சுமி ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் டாக்டர் ஆர்...
கிராண்ட் பிக்சர்ஸ் (Grand Pictures) நிறுவனத்தின் தயாரிப்பில், அப் 7 வெஞ்சர்ஸ் ஆதிராஜ் புருஷோத்தமன் இணைத் தயாரிப்பில், அபின் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகியுள்ள மெடிக்கல் கிரைம் த்ரில்லர் திரைப்படம் ’அதர்ஸ்’...