‘விவேகம்’ படத்திற்கு பிறகு மீண்டும் சிவாவுடன் இணைந்திருக்கும் அஜித், படத்திற்கு ‘விஸ்வாசம்’ என்று தலைப்பு வைத்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், ஹீரோயின் மற்றும் வில்லன் குறித்து பல தகவல்கள் வெளியானாலும், அனைத்தும் வதந்திதான் என்று தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், ‘விஸ்வாசம்’ வட சென்னையை மையமாக வைத்த கதை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இளம் வயது கெட்டப்பில் அஜித் தோன்றும் இப்படத்தின் கதை முழுவதும் வட சென்னையில் நடக்கிறது போல அமைக்கப்பட்டிருக்கிறதாம். மேலும், இதில் அஜித் வட சென்னை தாதாவாக நடித்திருக்கிறாராம்.
இதற்காக வட சென்னையில் உள்ள சில பகுதிகளில் முக்கியமான காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ள இயக்குநர் சிவா, வட சென்னை பகுதியைப் போல பிரம்மாண்ட செட் ஒன்றை போடும் பணியிலும் ஈடுபட்டுள்ளாராம்.
தொடர்ந்து 4 மாதங்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ள தயாரிப்பு தரப்பு படத்தை தீபாவளியன்று வெளியிட முடிவு செய்துள்ளது.
அண்ணா புரொடக்ஷன்ஸ் சார்பில் வி...
ஸ்ரீ லட்சுமி ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் டாக்டர் ஆர்...
கிராண்ட் பிக்சர்ஸ் (Grand Pictures) நிறுவனத்தின் தயாரிப்பில், அப் 7 வெஞ்சர்ஸ் ஆதிராஜ் புருஷோத்தமன் இணைத் தயாரிப்பில், அபின் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகியுள்ள மெடிக்கல் கிரைம் த்ரில்லர் திரைப்படம் ’அதர்ஸ்’...