இளம் வயதில் முன்னணி இசையமைப்பாளராகியுள்ள அனிருத், அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். முதல் படத்திலேயே தனது ‘கொலவெறி...’ பாடலை உலகம் முழுவதும் பாப்புலராக்கிய இவரது மெட்டுக்களில் வரும் பாடல்கள் பல சூப்பர் ஹிட்டாகி வருகிறது.
தற்போது, தமிழை தொடர்ந்தி தெலுங்கு சினிமாவிலும் அடியெடுத்து வைத்துள்ள அனிருத், அப்படியே புதிய தொழில் ஒன்றையும் தொடங்கி அதில் ஈடுபாடு காட்டி வருகிறார்.
ஆம், அனிருத் சென்னை தேனாம்பேட்டையில் புதிதாக ஓட்டல் ஒன்றை தொடங்கியுள்ளார். ‘தி சம்மர் ஹவுஸ் ஈட்டரி’ (The Summer House eatery) என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த ஓட்டலை, தேனாம்பேட்டையை தவிர்த்து சென்னையின் மேலும் சில பகுதிகளிலும் கிளைகளை திறக்க அனிருத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...