விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்’ படம் மிகப்பெரிய வெற்றிப் பெற்றுள்ளது. சிறுவர்கள், பெண்கள் என்று குடும்பம் குடும்பமாக இப்படத்தைக் காண ரசிகர்கள் தியேட்டருக்கு படையெடுத்து வருவதால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இதற்கிடையே, சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்கும் தெலுங்குப் படமான ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரரான உய்யலாலா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம் தெலுங்கு மட்டும் இன்றி இந்தி மற்றும் தமிழிலும் உருவாகிறது.
ஆக, இப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் எண்ட்ரியாகும் விஜய் சேதுபதி, அப்படியே பாலிவுட்டிலும் எண்ட்ரியாகிறார். தற்போது முதல் கட்டப் படப்பிடிப்பு முடிந்து இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தொடங்க உள்ள இதில் விஜய் சேதுபதி பங்கேற்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளது.
எம்.பி.என் மூவிஸ் சார்பில் எம்...
பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி, இறுதி போட்டியில் ஈரானை வீழ்த்தி தங்கம் வென்றது...
அண்ணா புரொடக்ஷன்ஸ் சார்பில் வி...