சினிமா மற்றும் டிவி சீரியல்களில் நடித்து பிரபலமாகும் நடிகைகள் பலர் பொது நிகழ்ச்சிகளிலும் அவ்வபோது கலந்துக் கொள்கிறார்கள். அப்படி கலந்துக் கொண்ட நடிகை ஒருவர் மூன்று பேர் கொண்ட கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த நடிகையும் பாடகியுமான சும்புல் கான், என்பவர் டிவி நிகழ்ச்சி மற்றும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். 25 வயதான இவர் பாகிஸ்தானில் பிரபலமான நடிகை ஆவார்.
பார்ட்டி ஒன்றில் கலந்துக் கொண்ட அவரை மூன்று பேர் கொண்ட கும்பல் பாடச்சொல்லி வற்புறுத்தியுள்ளது. அவர்கள் பல முறை வற்புறுத்தியும் சும்புல் கான் பாட மறுத்திருக்கிறார். இதனால் கோபமடைந்த அந்த கும்பல், துப்பாக்கியால் அவரை சரமாரியாக சுட்டுக்கொன்று தப்பியுள்ளது.
மூன்று பேரையும் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட போலீஸ், நயீம் கட்டாக் என்பவரை மட்டும் கைது செய்துள்ளது. அவர் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி என்பது குறிப்பிடத்தகக்து.
எம்.பி.என் மூவிஸ் சார்பில் எம்...
பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி, இறுதி போட்டியில் ஈரானை வீழ்த்தி தங்கம் வென்றது...
அண்ணா புரொடக்ஷன்ஸ் சார்பில் வி...