Latest News :

10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் களத்தில் இறங்கும் ஷகீலா!
Sunday February-04 2018

தமிழகத்தைச் சேர்ந்தவரான நடிகை ஷகீலா, ஒரு சில தமிழ்ப் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருந்தாலும், மலையாள சினிமாவையே பல ஆண்டுகளாக அவர் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். மோகன்லால், மம்மூட்டி உள்ளிட்ட முன்னணி நடிகர்களே ஷகீலாவின் படங்களுக்கு ரசிகர்களிடம் கிடைக்கும் வரவேற்பை கண்டு மிரண்டதுண்டு.

 

இதனாலேயே, அவர் கேரளாவில் இருந்து விரட்டியடிக்கப்பட்டார். பிறகு, அப்படிப்பட்ட படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட ஷகீலா, மீண்டும் தமிழ்ப் படங்களில் நடிக்க தொடங்கினார். ஒரு சில படங்களில் காமெடி வேடங்களில் நடித்த அவருக்கு சினிமா வாய்ப்புகள் சுத்தமாக நின்று போனதால், வீட்டுக்குள்ளேயே முடங்கியிருந்தார்.

 

இந்த நிலையில், 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கவர்ச்சி களத்தில் ஷகீலா இறங்கியுள்ளார். அவரது நடிப்பில் ‘ஷீலாவதி வாட் தி ப**க்’ (Sheelavati What the F**k) என்ற தெலுங்குத் திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் ஷகீலா சிகரெட் புகைப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகளோடு, மது அருந்துவது போன்ற காட்சிகளிலும் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

 

10 வருடங்களுக்குப் பிறகு ஷகீலா நடித்துள்ள, அந்தமாதிரியான இந்த படத்தின் பஸ்ட் லுக்கை அண்மையில் சமீகலாவே வெளியிட்டுள்ளார். ஏப்ரல் மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளன.

Related News

1925

மதுரையில் நடைபெற்ற ‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா!
Tuesday April-28 2026

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...

கிருஷ்ண ஜன்மபூமியில் வெளியான ’கிருஷ்ணாவதாரம்’ டிரைலர்
Monday April-27 2026

கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...

‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!
Monday April-27 2026

ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...

Recent Gallery