நிஜ காதல் ஜோடிகளான ஜெய் - அஞ்சலி மீண்டும் ஜோடி சேர்ந்துள்ள படம் ‘பலூன்’. இதில் மற்றொரு ஹீரோயினாக ஜனனி ஐயர் நடிக்க, ஜெய் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார்.
70 எம்.எம் மற்றும் பார்மெர்ஸ் மாஸ்டர் பிளான் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் சினிஷ் இயக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரே ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததோடு, படத்தின் டீசரும் பெரும் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இப்படத்தை செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து இப்படத்தை வெளியிடும் ஆரா சினிமாஸ் மகேஷ் கோவிந்தராஜன் கூறுகையில், “பலூன் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. இப்படம் சினிமா ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான அனுபவமாக இருக்கும். பண்டிகை வாரமான செப்டம்பர் 27 ஆம் தேதியன்று ‘பலூன்’ படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளோம். கதையம்சம் கொண்ட தரமான படங்களுக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் என்றுமே பேராதரவு தந்துள்ளனர். நல்ல கதையையும் அதற்கு சரியாக அங்கீகாரத்தை தரும் ரசிகர்களையும் மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட பலூன் நிச்சயம் வெற்றி பெறும் என உறுதியாக நம்புகிறேன்.” என்றார்.
'இறுதிப் பக்கம்' திரைப்படத்தைத் தயாரித்த இன்சாம்னியாக்ஸ் ட்ரீம் கிரியேஷன்ஸ் எல்...
தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...
திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...