Latest News :

வீட்டுக்குள் எலி பிடிக்கும் எஸ்.ஜே.சூர்யா!
Monday February-05 2018

ஹீரோவாக வெற்றி பெற்றே தீருவேன் என்ற உறுதியோடு இருக்கும் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன் இயக்கத்தில் ஹீரோவாக நடித்த ‘நெஞ்சம் மறப்பதில்லை’ ஒரு சில பிரச்சினைகளை வெளியாகமல் இருக்கிறது. அப்படத்தை நம்பியிருந்த எஸ்.ஜே.சூர்யா, அப்செட்டில் இருக்க, அவர் வில்லனாக நடித்த ‘ஸ்பைடர்’ எதிர்ப்பார்த்த வெற்றியை பெறாததால், மனுஷன் ரொம்பவே நொடிந்து போய்விட்டார்.

 

இந்த நிலையில், ‘ஒரு நாள் கூத்து’ படத்தின் இயக்குநர் நெல்சன் இயக்கும் புது படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக ஒப்பந்தமாகியுள்ளார். அவருக்கு ஜோடியாக ‘மேயாத மான்’ நாயகி பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.

 

பொட்டேன்ஷியன் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் கதை ஒரே வீட்டுக்குள் நடப்பது போல அமைக்கப்பட்டிருக்கிறதாம். குறைந்த பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்திற்கு சென்னையில் உள்ள ஸ்டுடியோ ஒன்றில் வீடு செட் போடப்பட்டுள்ளது. முழு படப்பிடிப்பும் அந்த செட் வீட்டுக்குள் தான் நடைபெற உள்ளது.

 

வீட்டுக்குள் இருந்துக்கொண்டு தொல்லை கொடுக்கும் ஒரு எலியை அடித்து கொல்ல எஸ்.ஜே.சூர்யா முயற்சிக்க, அதனால் ஏற்படும் பிரச்சினைகள் தான் படத்தின் கதையாம். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில், விரைவில் எஸ்.ஜே.சூர்யா எலி அடிக்கும் காட்சி படமாக்கப்பட உள்ளது.

Related News

1931

கண்ணகி நகர் கார்த்திகாவிற்கு ரூ.1 லட்சம் கொடுத்து வாழ்த்து தெரிவித்த நடிகர் மன்சூர் அலிகான்!
Sunday November-02 2025

பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி, இறுதி போட்டியில் ஈரானை வீழ்த்தி தங்கம் வென்றது...

Recent Gallery