தமிழ் சினிமாவில் தொடர்ந்து நம்பர் ஒன் நாயகியாக இருக்கும் நயந்தாராவுக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. வயதாகிவிட்டால் ஹீரோயின்கள் ஓரம் கட்டப்படுவது தான் வழக்கம், ஆனால் நயந்தாரா விஷயத்தில் அது எதிர்மறையாக மாறியுள்ளது. அவருக்கு வயது ஆக ஆக, வாய்ப்புகள் அதிகரித்துக் கொண்டே போகிறது.
ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வரும் நயந்தாராவுக்கு சில முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிக்க அழைப்பு வந்தும் அவர் மறுத்துவிட்டார். அத்துடன், ரொமான்ஸ் மற்றும் கவர்ச்சி காட்சிகளில் நடிக்க மாட்டேன், என்ற அவரது கண்டிஷனையும் ஏற்றுக்கொள்ள சில இயக்குநர்கள் தயாராக இருக்கிறார்களாம்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் அவரது 62 வது படத்தில் நயந்தாராவை ஹீரோயினாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், ஏற்கனவே ‘கஜினி’ படத்தின் போது முருகதாஸுடன் நயந்தாராவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அவர் விஜய் படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்தில் நயந்தாரா ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள செய்தியை அறிந்த விஜய் ரசிகர்கள் ரொம்பவே அப்செட்டாகியுள்ளார்களாம். முதலில் விஜய் தரப்பு தான் நயந்தாராவை அனுகியதாகவும், ஆனால் அவர் விஜய்க்கு நோ சொல்லிவிட்டு, அஜித்துக்கு ஓகே சொல்லியிருப்பது, விஜய் ரசிகர்கள் அவர் மீது செம கடுப்பில் இருக்கிறார்களாம்.
ஏற்கனவே, விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் அஜித் தான் எனது ஆல் டைம் பேவரைட் ஹீரோ, என்று நயந்தாரா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்.பி.என் மூவிஸ் சார்பில் எம்...
பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி, இறுதி போட்டியில் ஈரானை வீழ்த்தி தங்கம் வென்றது...
அண்ணா புரொடக்ஷன்ஸ் சார்பில் வி...