‘குக்கூ’, ‘ஜோக்கர்’ ஆகிய படங்களை இயக்கிய ராஜூ முருகன், தற்போது பாலா இயக்கத்தில் விக்ரமின் மகன் துருவ் நடிக்கும் ‘வர்மா’ படத்திற்கு வசனம் எழுதி வருபவர், தான் இயக்கும் அடுத்தப் படத்திற்கு ‘ஜிப்ஸி’ என்று தலைப்பு வைத்துள்ளார்.
இதில் ஜீவா ஹீரோவாக நடிக்க, ஒலிம்பியா மூவிஸ் சார்பில் எஸ்.அம்பேத்குமார் தயாரிக்கிறார். இவர் ஏற்கனவே ‘தேசிங்கு ராஜா’, ‘மனம்கொத்திப் பறவை’ ஆகியப் படங்களை தயாரித்துள்ளார்.
‘குக்கூ’ மற்றும் ‘ஜோக்கர்’ மூலம் சமூக வாழ்வியலை பிரதிபலிக்கும் கதைகளை படமாக்கியுள்ள இயக்குநர் ராஜூ முருகன், ‘ஜிப்ஸி’ படத்தை கமர்ஷியல் பாணியில் சமூக வாழ்வியலை சொல்லப் போகிறாராம்.
இந்தியா முழுவதிலும், பல்வேறு பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ள ராஜூ முருகன், இப்படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்க உள்ளார்.
எம்.பி.என் மூவிஸ் சார்பில் எம்...
பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி, இறுதி போட்டியில் ஈரானை வீழ்த்தி தங்கம் வென்றது...
அண்ணா புரொடக்ஷன்ஸ் சார்பில் வி...