Latest News :

மனைவிக்கு நோ சொன்ன உதயநிதி!
Tuesday February-06 2018

தயாரிப்பாளராக சினிமாவில் அறிமுகமான உதயநிதி, தற்போது ஹீரொவாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார். இதுவரை தனது சொந்த தயாரிப்பிலேயே நடித்து வந்த உதயநிதி, தற்போது பிற தயாரிப்பாளர்களின் படங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார்.

 

உதயநிதியின் மனைவி கிருத்திகா, ‘வணக்கும் சென்னை’ படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனியை வைத்து ‘காளி’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் தொடங்கியுள்ளன.

 

இந்த நிலையில், உதயநிதி தொலைக்காட்சி ஒன்றுக்கு சமீபத்தில் கொடுத்த பேட்டியில், “உங்கள் மனைவி படத்தில் நீங்கள் ஏன் நடிப்பதில்லை?” என்று கேட்கப்பட்டது. உடனே தனது மனைவிக்கு போன் செய்த உதயநிதி, அவரிடம், ”நீ ஏன் என்னை வைத்து படம் எடுக்கவில்லை” என்று கேட்டார். அதற்கு அவரோ ”தயாரிப்பாளர் கிடைக்கவில்லை” என்றார்.

 

மேலும், தயாரிப்பாளர் கிடைத்தால் படம் பண்ணலாம், என்று கூறிய கிருத்திகா “நான் முதலில் உங்களிடம் கூறிய கதையை தான் படமாக எடுப்பேன்” என்றும் கூறினார்.

 

அதற்கு உதயநிதி, அந்த கதை என்றால் நான் நடிக்கவே மாட்டேன், அந்த கதையில் ஹீரோ ஆரம்பத்திலேயே இறந்துவிடுவார், என்று மனைவிக்கே நோ சொல்லிவிட்டார்.

Related News

1939

மதுரையில் நடைபெற்ற ‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா!
Tuesday April-28 2026

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...

கிருஷ்ண ஜன்மபூமியில் வெளியான ’கிருஷ்ணாவதாரம்’ டிரைலர்
Monday April-27 2026

கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...

‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!
Monday April-27 2026

ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...

Recent Gallery