வடிவேலு மீது போலீசில் புகார் அளிக்க ரெடியாகும் இயக்குநர்!
Tuesday February-06 2018

சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்த வடிவேலு பிறகு நடிக்க தொடங்கினாலும், ஹீரோவாக ஹிட் கொடுத்த பிறகே காமெடி வேடத்தில் நடிப்பேன், என்று பிடிவாதமாக இருந்தார். இதற்காக அவர், இரண்டு படங்களில் ஹீரோவாக நடித்தார். அந்த படங்கள் தோல்வியடைந்ததால் அவர் மீண்டும் காமெடி வேடங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

 

இதற்கிடையே, இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகும்’ இம்சை அரசன் 24ம் புலிகேசி’ படத்தில் வடிவேலு ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவருக்கு ஜோடியாக பார்வதி ஓமனக்குட்டன் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

 

இப்படத்திற்காக அரண்மனை போன்ற செட் போடப்பட்டு படப்பிடிப்பும் நடத்தப்பட்டு வந்த நிலையில், வடிவேலு படக்குழுவினருக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் இருப்பதாக கூறப்பட்டது. மேலும், படத்தில் இருந்து அவர் விலகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

 

அதனால், ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ படம் நின்றுவிட்டதால், இயக்குநர் ஷங்கருக்கு பெரிய நஷ்ட்டம் ஏற்பட்டுள்ளதாகவும், அந்த நஷ்ட்டத்தை ஈடுகட்ட கோரி தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சங்கம் ஆகியவற்றில் அவர் வடிவேலு மீது புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியானது.

 

இரண்டு சங்கங்கள் சார்பாக வடிவேலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டாலும், அவர் தரப்பில் இருந்து எந்த விளக்கமும் இதுவரை வரவில்லை. அதனால், வடிவேல் மீது போலீசில் புகார் அளிக்க இயக்குநர் ஷங்கர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

 

இது குறித்து படக்குழுவிடம் விசாரித்ததற்கு, வடிவேலு மீது புகார் அளிப்பது எங்கள் நோக்கம் அல்ல, அவர் படப்பிடிப்பில் விரைவில் கலந்துக்கொள்ள வேண்டும், என்று கூறியுள்ளார்கள்.

 

தற்போது, ‘2.0’ படத்தின் கிராபிக்ஸ் பணியில் இருக்கும் இயக்குநர் ஷங்கர், வடிவேலு படப்பிடிப்பில் கலந்துக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால், அவர் படப்பிடிப்பில் பங்கேற்கவில்லை என்றால், நிச்சயம் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும், என்று தனது நெருங்கிய வட்டாரத்தில் கூறியுள்ளாராம்.

Related News

1941

’தாய் கிழவி’ மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் - சிவகார்த்திகேயன்
Wednesday March-11 2026

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...

உண்மை சம்பவத்தை இரத்தமும் சதையுமாக சொல்லும் ‘மனிதன் தெய்வமாகலாம்’!
Tuesday March-10 2026

வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...

நயன்தாராவை கெளரவித்த ‘பேட்ரியாட்’ படக்குழு!
Tuesday March-10 2026

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில்  நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...

Recent Gallery