Latest News :

மருத்துவ உதவி இல்லாமல் கஷ்ட்டப்பட்டு வந்த முன்னாள் நடிகைக்கு விஷால் உதவி!
Tuesday February-06 2018

பொருளாதார ரீதியாக கஷ்ட்டப்பட்டு வரும் முன்னாள் நடிகர், நடிகைகளுக்கு நடிகர் விஷால் தனது தேவி அறக்கட்டளை மூலம் நிதி உதவி வழங்கி வருகிறார். அதன்படி, பழைய நகைச்சுவை நடிகை பிந்து கோஷ் மருத்துவ உதவி இல்லாமல் கஷ்ட்டப்பட்டு வருவதை அறிந்த விஷல், தேவி அறக்கட்டளை மூலம் நிதி உதவி வழங்கியுள்ளார்.

 

‘களத்தூர் கண்ணம்மா’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பிந்து கோஷ். விமலா என்ற இயற்பெயர் கொண்ட இவர், ‘உருவங்கள் மாறலாம்’, ‘தலைமகன்’, ‘டெளரி கல்யாணம்’, ‘தூங்காதே தம்பி தூங்காதே’, ‘சூரகோட்டை சிங்கக்குட்டி’ உள்ளிட்ட பல படங்களை காமெடி வேடங்களில் நடித்துள்ளார்.

 

தற்போது இவர் எந்தவித மருத்துவ உதவியும் இல்லாமல் மிகவும் கஷ்டப்படுவதாக வார இதழ் ஒன்றில் செய்தி வெளியாகியிருந்தது. இதனை அறிந்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரும், தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் செயலாளருமான விஷால், தனது தேவி அறக்கட்டளை மூலமாக உடனடியாக ரூ.5 ஆயிரமும், மாதந்தோறும் ரூ.2500 உதவித் தொகையும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

Related News

1945

கண்ணகி நகர் கார்த்திகாவிற்கு ரூ.1 லட்சம் கொடுத்து வாழ்த்து தெரிவித்த நடிகர் மன்சூர் அலிகான்!
Sunday November-02 2025

பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி, இறுதி போட்டியில் ஈரானை வீழ்த்தி தங்கம் வென்றது...

Recent Gallery