Latest News :

முரட்டுத்தனமாக நடந்துக் கொள்ளும் சாய் பல்லவி - நடிகர் பரபரப்பு புகார்
Wednesday February-07 2018

’பிரேமம்’ என்ற மலையாலப் படம் மூலம் தென்னிந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. அப்படத்தில் அவர் நடித்த மலர் டீச்சர் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதனையடுத்து, சாய் பல்லவிக்கு தெலுங்கு மற்றும் தமிழ்ப் படங்களில் நடிக்க ஏராளமான வாய்ப்புகள் வர தொடங்கியது.

 

சாய் பல்லவி நடித்த தெலுங்குப் படமான ‘பிடா’ மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து தெலுங்கில் சாய் பல்லவிக்கு வாய்ப்புகள் குவிய தொடங்கியுள்ளது. 

 

விஜய் இயக்கத்தில், லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ‘கரு’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் சாய் பல்லவி, செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்திலும் ஹீரோயினாக ஒப்பந்தமாகியுள்ளார். 

 

இந்த நிலையில், கரு படத்தில் ஹீரோவாக நடித்துள்ள இளம் தெலுங்கு நடிகர் நாக சவுரியா பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து பேட்டி ஒன்றில் கூறீய நாக சவுரியா, “சாய் பல்லவியை பற்றி எனக்கு பேச விருப்பம் இல்லை. படப்பிடிப்பில் அவரது நடவடிக்கைகள் சரியாக இல்லை. முரட்டுத்தனமாக நடந்து கொண்டார். சிறு சிறு விஷயங்களுக்கு எல்லாம் கோபப்பட்டார். தெலுங்கில் சாய் பல்லவி நடித்த பிடா படம் வெற்றி பெற்றது. அந்த வெற்றிக்கு சாய் பல்லவி காரணம் இல்லை” என்றார்.

 

ஏற்கனவே, நானியுடன் சாய் பல்லவி தெலுங்கு படம் ஒன்றில் நடிக்கும் போதும் இதே பிரச்சினை ஏற்பட்ட நிலையில், தற்போது மற்றொரு நடிகரும் சாய் பல்லவி மீது புகார் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

நடிகர்களின் இத்தகைய புகாரில் சாய் பல்லவி என்றாலே நடிகர்கள் அச்சம் கொள்கின்றார்களாம்.

Related News

1949

கண்ணகி நகர் கார்த்திகாவிற்கு ரூ.1 லட்சம் கொடுத்து வாழ்த்து தெரிவித்த நடிகர் மன்சூர் அலிகான்!
Sunday November-02 2025

பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி, இறுதி போட்டியில் ஈரானை வீழ்த்தி தங்கம் வென்றது...

Recent Gallery