Latest News :

பின்வாங்கிய ’2.0’, முன்னேறிய ‘காலா’!
Wednesday February-07 2018

ரஜினிகாந்த் நடிப்பில் ‘2.0’ மற்றும் ‘காலா’ என இரண்டு படங்கள் உருவாகி வருகிறது. ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் ‘2.0’ படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது. ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமான இப்படத்தில் வில்லனாக இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் நடிக்க, ஹீரோயினாக எமி ஜாக்சன் நடித்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

 

‘கபாலி’ யை தொடர்ந்து மீண்டும் ரஞ்சித்துடன் ‘காலா’ படத்தில் ரஜினி இணைந்திருப்பதால் அப்படம் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

இதற்கிடையே, முதலில் ‘2.0’ படத்தை ரிலீஸ் செய்வதாக ரஜினிகாந்த் முடிவு செய்திருந்த நிலையில், அப்படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முடிய இன்னும் காலம் ஆகும் என்பதால், அதற்கு முன்பாக ‘காலா’ படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்திருக்கிறாராம்.

 

தனுஷின் வுண்டர் பார் நிறுவனம் தயாரித்துள்ள ‘காலா’ மும்பையில் வசிக்கும் தமிழ் தாதா பற்றிய கதையாகும். இதில் ரஜினிகாந்த் வயதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து டப்பிங் பணிகள் சென்னையில் நடைபெற்று வந்தது. அனைத்து நடிகர்களும் டப்பிங்கை முடித்த நிலையில், கடைசியாக ரஜினிகாந்த் டப்பிங் பேசி முடித்துவிட்டார்.

 

தற்போது இறுதி கட்ட பணிகளில் படக்குழுவினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இப்படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 13ம் தேதி வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

Related News

1950

கண்ணகி நகர் கார்த்திகாவிற்கு ரூ.1 லட்சம் கொடுத்து வாழ்த்து தெரிவித்த நடிகர் மன்சூர் அலிகான்!
Sunday November-02 2025

பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி, இறுதி போட்டியில் ஈரானை வீழ்த்தி தங்கம் வென்றது...

Recent Gallery