Latest News :

பூஜையுடன் தொடங்கிய ‘களவாணி மாப்பிள்ளை’!
Wednesday February-07 2018

நம்ம  ஊரு பூவாத்தா, ராக்காயி கோயில், பெரிய கவுண்டர் பொண்ணு, கட்டபொம்மன், நாடோடி மன்னன், மாப்பிள்ளை கவுண்டர் உட்பட 16 சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த ராஜபுஷ்பா பிக்சர்ஸ் பட நிறுவனம் பதினேழு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பட தயாரிப்பில் ஈடுபட உள்ளனர்.

 

இந்த நிறுவனத்தின் தயாரிப்பாளரான மணிவாசகம் தான் இந்த அனைத்து படங்களையும் இயக்கியவர். அந்த கால கட்டத்தில் வணிக ரீதியான சக்சஸ் புல் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் கவனிக்கப்பட்டவர் மணிவாசகம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அவர் மறைந்து  17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் படத்தயாரிப்பில் ராஜபுஷ்பா பிக்சர்ஸ் களமிறங்குகிறது.

 

மணிவாசகத்தின் மகனான காந்திம ணிவாசகம் தயாரித்து, இயக்கும் ‘களவாணி மாப்பிள்ளை’ படத்தில்  தினேஷ் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக அதிதி மேனன் நடிக்கிறார். மற்றும் ஆனந்த்ராஜ், தேவயாணி, ரேணுகா, மனோபாலா, மகாநதி சங்கர், மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

 

சரவண்ணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு என்.ஆர்.ரகுநந்தன் இசையமைக்கிறார். பி.கே எடிட்டிங் செய்ய, மாயா பாண்டி கலையை நிர்மாணிக்கிறார்.  தினேஷ் நடனம் அமைக்க, திலீப் சுப்பராயன் ஸ்டண்ட் காட்சிகளை வடிவமைக்கிறார். சிவசந்திரன் தயாரிப்பு மேற்பார்வையை கவனிக்க, திருமூர்த்தி இணை தயாரிப்பை கவனிக்கிறார். ராகேஸ்வரி மணிவாசகம் தயாரிக்க, கதை, திரைக்கதை எழுதி காந்தி மணிவாசகம் இயக்குகிறார்.

 

ஜனரஞ்சகமான காதல், காமெடி படமாக உருவாகும் இப்படத்தின் துவக்க விழா இன்று (பிப்.07) இன்று சென்னையில் நடைபெற்றது. படப்பிடிப்பு வரும் பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் பொள்ளாச்சியில் தொடங்க உள்ளது.

Related News

1951

மதுரையில் நடைபெற்ற ‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா!
Tuesday April-28 2026

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...

கிருஷ்ண ஜன்மபூமியில் வெளியான ’கிருஷ்ணாவதாரம்’ டிரைலர்
Monday April-27 2026

கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...

‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!
Monday April-27 2026

ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...

Recent Gallery