Latest News :

இளையராஜாவுக்கு சினிமா பத்திரிகையாளர் சங்கம் மரியாதை!
Wednesday February-07 2018

ஒட்டு மொத்த தமிழர்களையும் தனது இசையால் கட்டிப்போட்டிருக்கும் இளையராஜாவுக்கு மத்திர அரசு சார்பில் வழங்கப்படும் பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு துறையைச் சேர்ந்தவர்கள் அவருக்கு வாழ்த்து சொல்லி, அவரிடம் ஆசி பெற்று வருகிறார்கள்.

 

சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் இன்று காலை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட சில அரசியல் தலைவர்கள் இளையராஜாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்து ஆசிப்பெற்றனர். மேலும், பாடகர்கள், இசையமைப்பாளர்கள் உள்ளிட்ட திரையுலகைச் சேர்ந்தவர்களும் இளையராஜாவிடம் ஆசிப்பெற்றனர்.

 

சினிமா பத்திரிகையாளர் சங்கம் சார்பில், சங்கத்தின் தலைவர் பாலேஸ்வர், செயலாளர் கார்த்திக், பொருளாளர் மதிஒளி குமார் உள்ளிட்டவர்களோடு பிற நிர்வாகிகளும், செயற்குழு உறுப்பினர்களும் இளையராஜாவுக்கு மாலை போட்டு, பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

Related News

1959

மதுரையில் நடைபெற்ற ‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா!
Tuesday April-28 2026

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...

கிருஷ்ண ஜன்மபூமியில் வெளியான ’கிருஷ்ணாவதாரம்’ டிரைலர்
Monday April-27 2026

கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...

‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!
Monday April-27 2026

ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...

Recent Gallery