நிவின் பாலி, திரிஷா நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஹேய் ஜூட்’ மலையாளப் படம் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது. இப்படத்திற்கு பிறகு நிவின் பாலி நடிப்பில் ‘காயங்குளம் கொச்சுன்னி’ என்ற படம் வெளியாக உள்ளது. உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் இப்படத்திற்காக, தனது கதாபாத்திரற்கு ஏற்றவாறு தனது உடல் எடையை அதிகரித்து நிவின் பாலி நடித்திருக்கிறார்.
அடுத்ததாக அவர், ‘லவ் ஆக்ஷன் டிராமா’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் நிவின் பாலிக்கு ஜோடியாக நயந்தாரா நடிக்கிறார். ஹீரோக்களுடன் நோ ரொமன்ஸ், நோ கிளாமர் என்று சொல்லிவந்த நயந்தாரா, இந்த படத்தில் நிவின் பாலியுடன் டூயட் பாட சம்மதம் தெரிவித்துள்ளாராம். இதற்காக தனது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்ட நிவின் பாலி, தற்போது 10 கிலோ எடையை குறைத்துவிட்டாராம்.
மலையாள சினிமாவில் இளம் முன்னணி இயக்குநராக உள்ள வினீத் சீனிவாசனின் தம்பி தயன் சீனிவாசன் தான் ‘லவ் ஆக்ஷன் டிராமா’ படத்தை இயக்குகிறார். மேலும், நிவின் பாலி, தயன், வினீத் என்று மூவர் கூட்டணியில் உருவாகும் படத்தில் ரெகுலராக முக்கிய வேடத்தில் நடிக்கும் அஜூவர்கீஸ் என்பவர் இந்த படத்திலும் முக்கியமான வேடத்தில் நடிப்பதோடு, இந்த படத்தையும் தயாரிக்கிறார்.
எம்.பி.என் மூவிஸ் சார்பில் எம்...
பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி, இறுதி போட்டியில் ஈரானை வீழ்த்தி தங்கம் வென்றது...
அண்ணா புரொடக்ஷன்ஸ் சார்பில் வி...