Latest News :

விஜய் கைவிட்ட அட்லீக்கு கைகொடுத்த சூப்பர் ஸ்டார்!
Thursday February-08 2018

தொடர்ந்து மூன்று ஹிட் படங்களை கொடுத்திருக்கும் இயக்குநர் அட்லீ விஜயை வைத்து இயக்கிய ‘தெறி’ மற்றும் ‘மெர்சல்’ மிகப்பெரிய வெற்றிப் பெற்றது. இதையடுத்து அவர் மீண்டும் விஜயுடன் இணைய இருப்பதாக தகவல் வெளியான நிலையில், விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகக தொடங்கியுள்ளார். இது அவரது 62 வது படமாகும், இப்படம் முடிந்த பிறகு அட்லீயுடன் விஜய் இணைவார் என்று கூறிவந்த நிலையில், விஜய் தனது 63 வது படத்திற்கு வேறு ஒரு இயக்குநரை ஒகே செய்திருப்பதாக கூறப்பட்டுகிறது.

 

தனது நான்காவது படம் விஜயுடன் தான் இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பில் இருந்த அட்லீக்கு விஜயின் நடவடிக்கை பெரும் ஏமாற்றத்தைக் கொடுக்க, அவர் ஆந்திர சினிமா பக்கம் செல்ல முடிவு செய்திருந்தவருக்கு பிரபாஸ் கால்ஷீட் கொடுத்திருப்பதாக கூறப்பட்டது. ஆனால், அது வதந்தி என்று தெரிய வந்தது.

 

இந்த நிலையில், அட்லீ அடுத்ததாக ரஜினிக்கு கதை பண்ணுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் ரஜினியிடம் ஒரு கதை சொல்லியதாகவும், அந்த கதை ரஜினிகாந்துக்கு மிகவும் பிடித்துவிட்டதாகவும், தற்போது அந்த கதையின் திரைக்கதை அமைப்பில் அட்லீ ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அட்லீ - ரஜினி இணையும் படத்தை ‘மெர்சல்’ படத்தை தயாரித்த ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

ரஜினிகாந்த் நடிப்பில் ’காலா’ மற்றும் ‘2.0’ என இரண்டு படங்கள் வெளியாக உள்ளது. அதன் பிறகு அவர் அரசியலில் தீவிரம் காட்ட முடிவு செய்துள்ளதால், படங்களில் நடிப்பதை தவிர்க்கலாம் அல்லது ஒரே ஒரு படத்தில் நடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Related News

1962

மதுரையில் நடைபெற்ற ‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா!
Tuesday April-28 2026

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...

கிருஷ்ண ஜன்மபூமியில் வெளியான ’கிருஷ்ணாவதாரம்’ டிரைலர்
Monday April-27 2026

கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...

‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!
Monday April-27 2026

ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...

Recent Gallery