விளையாட்டு சம்மந்தமான கதைகளும், அதிலும் நடிகைகள் அதில் முக்கிய கதாபாத்திரமாக நடிக்கும் படங்களும் பெரிய வெற்றிப் பெற்று வருகின்றது. அந்த வரிசையில் நிகிஷா படேல், குத்துச்சண்டை வீராங்கனையாக தெலுங்குப் படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.
பவன் கல்யாண் நடிப்பில் வெளியான தெலுங்குப் படமான ‘புலி’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான நிகிஷா படேல், ‘தலைவன்’ மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பிறகு ‘கரையோரம்’, ‘என்னமோ ஏதோ’, ‘நாரதன்’, ‘7 நாட்கள்’ ஆகிய படங்களில் நடித்தார்.
தற்போது, தெலுங்கு படம் ஒன்றில் ஒப்பந்தமாகியிருக்கும் நிகிஷா படேல், அதில் குத்துச்சண்டை வீராங்கனை வேடம் ஏற்றுள்ளார். அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இப்படத்தில் வில்லனாக முகுல் தேவ் நடிக்கிறார்.
நிகிஷா படேலுக்கு நீண்ட நாட்களாக ஆக்ஷன் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததாம், தற்போது அந்த ஆசையை இந்த தெலுங்குப் படம் பூர்த்தி செய்துள்ளதாம். படத்தில் நிகிஷா படேலுக்கு ஏகப்பட்ட அதிரடி ஆக்ஷன் காட்சிகள் இருக்கிறதாம்.
இதுவரை கவர்ச்சியில் மிரட்டிய நிகிஷா படேல், இந்த படத்தின் மூலம் ஆக்ஷனின் ரசிகர்களை மிரட்டுவதோடு, தொடர்ந்து இதுபோன்ற அதிரடியாக ஆக்ஷன் படங்களில் நடிக்க முடிவு செய்திருக்கிறாராம்.
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிட்டெட் நிறுவனம், அடுத்த தயாரிப்பை அறிவிப்பதில் பெருமை கொள்கிறது...
ஒரு வித்தியாசமான முயற்சியாக மூன்று மதத் தலைவர்கள் இணைந்து ஒரு திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டனர்...
திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் கவின் கதையின் நாயகனாக நடிக்கிறார்...