‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான ஸ்ரீ திவ்யா, அப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் தொடர்ந்து பல வாய்ப்புகளை பெற்றதோடு, சம்பளத்தையும் உயர்த்தினார்.
’பென்சில்’, ‘மாவிரன் கிட்டு’, ‘ஜீவா’ என்று ஸ்ரீ திவ்யா நடித்த அனைத்து படங்களும் ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய படங்களாக இருந்தது. ஆனால், திடீரென்று ஸ்ரீ திவ்யாவுக்கு வாய்ப்புகள் குறைய தொடங்கியது. இதனால் கடந்த ஆண்டு ஸ்ரீ திவ்யா நடிப்பில் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ என்ற படம் மட்டுமே ரிலீஸ் ஆனது. தற்போது ‘ஒத்தைக்கு ஒத்த’ என்ற ஒரு படத்தில் மட்டுமே ஸ்ரீ திவ்யா நடித்து வருகிறார்.
தமிழில் பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் ஸ்ரீ திவ்யா, தனது சொந்த மொழியான தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார். அதற்காக, தெலுங்கு சினிமா தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களுக்கு தான் நடத்திய புதிய போட்டோ சூட் தொகுப்பை அவர் கொடுத்து வருகிறார்.
தெலுங்கில் கவர்ச்சியாக நடிக்க சொன்னாலும், அதற்கு தயாராக உள்ள ஸ்ரீ திவ்யா, தனது சம்பளத்தை சற்று குறைத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
சுரஜ் புரொடக்ஷன்ஸ் சார்பில் ரமேஷ் ரெட்டி தயாரிப்பில், டாக்டர்...
60 ஆண்டுகளுக்கும் அதிகமாக இந்தியாவின் மிகவும் நம்பகமான ஆபரண நிறுவனமாக இயங்கி வரும் ஜோஸ் ஆலுக்காஸ், பிரபல நடிகர் துல்கர் சல்மான் தனது பிராண்டின் விளம்பரத் தூதராக இணைந்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது...
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (TKM) மற்றும் DRUM TAO ஆகியவை இரண்டாவது முறையாக சென்னைக்கு மறக்க முடியாத ஆற்றல் மற்றும் தாள கலவையை கொண்டு வந்தன, மக்களின் தேவைக்கேற்ப மீண்டும் வந்தன...