’காற்று வெளியிடை’ படத்திற்குப் பிறகு மணிரத்னம் பெரிய நட்சத்திர பட்டாளத்தை வைத்து படம் ஒன்றை இயக்குவதாக் அறிவித்திருந்தாலும், அப்படத்தின் தலைப்பு அறிவிக்கப்படாமல் இருந்தது. தற்போது, அப்படத்திற்கு ‘செக்கச்சிவந்த வானம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது.
லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தோடு, மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், பிரகாஷ்ராஜ், தியாகராஜன், மன்சூர் அலிகான், ஜெயசுதா, ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார். வைரமுத்து பாடல்கள் எழுத, ஷர்மிஷ்டா ராய் கலையை நிர்மாணிக்கிறார். ஏகா லகானி உடைகள் வடிவமைப்பை கவனிக்க, திலிப் சுப்பராயண் சண்டைப்பயிற்சி அமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.
தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்துவரும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘புரொடக்சன்-10’ என பெயரிடப்பட்டுள்ள புதிய படம் தயாராகிறது...
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிட்டெட் நிறுவனம், அடுத்த தயாரிப்பை அறிவிப்பதில் பெருமை கொள்கிறது...
ஒரு வித்தியாசமான முயற்சியாக மூன்று மதத் தலைவர்கள் இணைந்து ஒரு திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டனர்...