திரைப்பட தயாரிப்பாளர்கள் யாரை பாராட்டினாலும் நடிகைகளை பாராட்டுவது என்பது குதிரை குன்பு தான். காரணம், குளிப்பதற்கே மினரல் வாட்டர் கேட்கும் ரகம் கொண்ட நடிகைகள் சினிமாவில் ஏராளம். ஆனால், அதில் ஒன்று இரண்டு நடிகைகள் கேரோ வேன் இல்லை என்றாலும் கூட அனுசரித்து போகிறவர்களும் உண்டு. அப்படிப்பட்ட நடிகையாக அவதாரம் எடுத்திருக்கிறார் ரெஜினா.
தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகையாக இருக்கும் ரெஜினா, தமிழில் முன்னணி நடிகையாவதற்காக ரொம்பவே அட்ஜெட்ஸ்ட் செய்து வருகிறார். ககவர்ச்சியாக நடிப்பதோடு, சம்பளத்தையும் குறைத்துக்கொண்டவர் தயாரிப்பாளர்களுக்கு எந்தவித தொல்லையும் கொடுக்காமல், பலவிதத்தில் அட்ஜெட்ஸ் செய்கிறாராம்.
தற்போது திரு இயக்கத்தில் கார்த்திக் கவுதம் மற்றும் கார்த்திக் இணைந்து நடிக்கும் ‘Mr.சந்திரமெளலி’ படத்தில் நடித்து வருகிறார். அவர் கொடுத்த ஈடுபட்டால் படப்பிடிப்பை வேகமாக நடத்திய தயாரிப்பாளர் தனஞ்செயன், முழு படப்பிடிப்பையும் நேற்று முடித்துவிட்டார். இதையொட்டி நேற்று கேக் வெட்டி படக்குழுவினர் கொண்டாடியுள்ளனர்.
இது குறித்து கூறிய தயாரிப்பாளர் தனஞ்செயன், “தொழில் பக்தி உள்ள ஒரு கதாநாயகி ரெஜினா. அர்பணிப்பிலும், நடிப்பிலும் அவருக்கு நிகர் அவரே. அவரது ஆற்றலும் பங்களிப்பும் இந்த படத்திற்கு பெரும் பலமாகவுள்ளது. படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு நடந்து வருகின்றது. வரும் கோடை விடுமுறை காலத்தில் 'Mr.சந்திரமௌலி' ரிலீஸ் ஆகும்.” என்றார்.
இந்த படத்தை பாப்டா மீடியா ஒர்க்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடேட் சார்பில் கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இயக்குநர்கள் மகேந்திரன், அகத்தியன், சந்தோஷ் பிரதாப், அதிஷ், ஜகன், மைம் கோபி, விஜி சந்திரசேகர், மனோ பாலா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். சாம் சி.எஸ் இசையமைக்க, ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்ய, டி.எஸ்.சுரேஷ் படத்தொகுப்பு செய்கிறார். ஜாக்கி கலையை நிர்மாணிக்கிறார்.
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...
எம்.பி.என் மூவிஸ் சார்பில் எம்...
பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி, இறுதி போட்டியில் ஈரானை வீழ்த்தி தங்கம் வென்றது...