விமல், சிவா, அஞ்சலி, ஓவியா ஆகியோரது நடிப்பில், சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான ‘கலகலப்பு’ பெற்ற வெற்றியை தொடர்ந்து, நேற்று வெளியான அதன் இரண்டாம் பாகமான ‘கலகலப்பு 2’ ரசிகர்களிடம் மிக்கபெரிய அளவில் வரவேற்பு பெற்றுள்ளது.
ஜீவா, ஜெய், கேத்ரின் தெரசா, நிக்கி கல்ராணி, சிவா, யோகி பாபு, ரோபோ சங்கர் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இப்படத்தை சுந்தர்.சி இயக்கியிருக்கிறார்.
பி மற்றும் சி செண்டர் ஆடியன்ஸிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ள ‘கலகலப்பு-2’ முதல் நாளிலேயே சிறப்பான ஓபனிங்கை பெற்றுள்ளதாக திரையரங்க உரிமையாளர்கள் கூறியுள்ளனர். சென்னையில் மட்டும் இப்படம் முதல் நாளில் ரூ.50 லட்சத்திற்கும் மேலாக வசூல் செய்திருப்பதாகவும், தமிழகம் முழுவதும் சுமார் ரூ.3 கோடி வசூல் செய்திருக்கும் என்றும் கூறப்படுகிறது.
திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் கவின் கதையின் நாயகனாக நடிக்கிறார்...
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர் ஜீவா, பிளாக் பட வெற்றி இயக்குநர் கே...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ஊர்வசி மற்றும் ஜோஜு ஜார்ஜ் இணையும் புதிய பன்மொழி திரைப்படமான “ஆஷா” படத்தின் பூஜை, திருகக்கரையில் உள்ள வாமன மூர்த்தி கோவிலில் இன்று விமரிசையாக நடைபெற்றது...