பேய் படங்களை சினிமா தியேட்டரில் பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள் விரைவில் சினிமா தியேட்டரிலேயே பேயை பார்க்கப் போகிறார்கள். அந்த தியேட்டர் தான் ‘நாகேஷ் திரையரங்கம்’.
ஆரி, ஆஷ்னா சவேரி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நாகேஷ் திரையரங்கம்’. டிரான்ஸ் இந்தியா மீடியா நிறுவனம் சார்பில் ராஜேந்திர எம்.ராஜன் தயாரித்துள்ள இப்படத்தை இசாக் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன்பு ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட ‘அகடம்’ படத்தை இயக்கி கின்னஸ் சாதனை புரிந்துள்ளார்.
படம் குறித்து இயக்குநர் இசாக் கூறுகையில், “ஆரி கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் கதாநாயகியாக் ஆஷ்னா சவேரி நடித்திருக்கிறார். இவர்களுடன் காளி வெங்கட், மும்பை மாடல் மாசூம் சங்கர், மனோபாலா, சித்ரா லட்சுமணன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரங்களில் லதாவும், சித்தாரவும் நடித்திருக்கிறார்கள். நவுஷாத் ஒளிப்பதிவில், ஸ்ரீ இசையமைத்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் இன்று வரை எண்ணற்ற திகில் படங்களும், பேய் படங்களும் வந்திருந்தாலும், அவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்ட விதத்தில், கதை, திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. திரையரங்கில் பேய் என்ற புதிய கோணத்தில், படம் உருவாகி இருக்கிறது. படம், தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. ஆட்சேபகரமான காட்சிகள் இருப்பதாக கூறிய தணிக்கை குழுவினர், 19 இடங்களை வெட்டி நீக்கிவிட்டு, யு ஏ சான்றிதழ் கொடுத்து இருக்கிறார்கள்.” என்றார்.
'பரதேசி' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ரித்விகா 'மெட்ராஸ்' படம் மூலம் பிரபலமடைந்ததோடு, பல்வேறு விருதுகளையும் பெற்றார்...
சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் 98 ஆவது படத்தை இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்க, தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு - பகத் பாசில் இணைந்து நடித்திருக்கும் 'மாரீசன்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது...
எம் என் ஆர் பிக்சர்ஸ் சார்பில், எம் நாகரத்தினம் தயாரித்து நடிக்க, இயக்குநர் எஸ் மோகன் எழுதி இயக்க, கிராமத்துக் கதைக்களத்தில் அருமையான கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள படம், வள்ளிமலை வேலன்...