திரைப்பட இயக்குநர் நாஞ்சில் பி.சி.அன்பழகன் அவர்களின் இல்ல விழாவில், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, முன்னாள் மேயர் சைதை துரைசாமி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் ஏராளமானோர் கலந்துக் கொண்டார்கள்.
‘காமராசு’, ‘அய்யா வழி’, ‘நதிகள் நனைவதில்லை’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய நாஞ்சில் பி.சி.அன்பழகனின் மகள்கள் சுவேதா, சுருதி ஆகியோரின் ருதுமங்கள விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் தமிழக அமைச்சர்கள் திரு.ஜெயக்குமார், திரு.தங்கமணி, முன்னாள் மேயர் திரு.சைதை துரைசாமி, முன்னாள் அமைச்சர்கள் திருமதி.வளர்மதி, திரு.தளவாய் சுந்தரம், நடிகர்கள் ராமராஜன், சிங்கமுத்து, அனுமோகன், தியாகு, நடிகை ரிசா, இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், சக்தி சிதம்பரம், இசையமைப்பாளர் செளவுந்தர்யன், கவிஞர்கள் முத்துலிங்கம், பிறை சூடன், தயாரிப்பாளர் சோழா பொன்னுரங்கம், சினிமா மக்கள் தொடர்பாளர் கோவிந்தராஜ் உள்ளிட்ட ஏராளமான அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் கலந்துக் கொண்டு வாழ்த்து தெரிவித்தார்கள்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்து பேசிய இயக்குநர் நாஞ்சில் பி.சி.அன்பழகன், தனது அடுத்தப் படத்தின் அறிவிப்பை விரைவில் வெளியிட இருப்பதாக தெரிவித்தார்.
’கைதி’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ், தற்போது நாயகனாக பலதரப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்று வருகிறார்...
சன்லைட் மீடியா எழுமலை ஏ.எஸ்...
லவ் பிலிம்ஸ் வழங்கும் லவ் ரஞ்சன் மற்றும் அங்கூர் கார்க் தயாரிப்பில் பிரபல இயக்குநர் ஜி...