தனி பிளைட்டில் தான் படப்பிடிப்புக்கு வருவேன்! - அடம் பிடித்த பிரபு
Tuesday February-13 2018

நடிகர் திலகத்தின் வாரிசான இளைய திலகம் பிரபு தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார். அவரது மகன் விக்ரம் பிரபு தமிழ் சினிமாவின் முக்கிய இளம் ஹீரோக்களில் ஒருவராக உயர்ந்தும் கூட, பிரபு தொடர்ந்து நடித்து வருகிறார். அப்பா, அண்ணன் உள்ளிட்ட குணச்சித்திர வேடங்களில் நடித்து அசத்தி வரும் பிரபு, வில்லன் வேடங்களில் கூட நடித்து வருகிறார்.

 

திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் பிரபு, மறுபக்கம் விளம்பரப் படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். அதிலும், கல்யாண் ஜுவல்லர்ஸ் விளம்பரம் என்றால், அந்த நிறுவனத்தின் பெயர் இல்லாமல் கூட இருக்கும் பிரபு இல்லாமல் இருக்கவே இருக்காது. அந்த அளவுக்கு அந்த நிறுவனத்தின் முக்கியமான நபராகிவிட்டார் பிரபு. இது ஏன், கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனமே பிரபுவோடதாமே, என்று சிலர் பேசிக்கொள்ளும் அளவுக்கு அந்த நிறுவனத்தோடு அவர் பின்னிபினைந்துள்ளார். அதற்கு காரணம், அந்நிறுவனம் தொடங்கிய காலத்தில், அந்நிறுவனத்தின் விளம்பர தூதரானவர் பிரபு, அதன் பிறகு அந்த நிறுவனம் ஏகப்பட்ட கிளைகளை தொடங்கிவிட்டது. பிரபுவின் ராசியும் இதற்கு ஒரு காரணம் என்று நினைக்கும் கல்யாண் ஜுவல்லர் நிறுவனம், பிரபுவுக்கு ராஜமரியாதை கொடுத்து வருகிறது.

 

இந்த நிலையில், கல்யாண் ஜுவல்லர் தனது நிறுவனத்தின் புதிய விளம்பரப் படம் ஒன்றை கும்பகோணத்தில் எடுக்க திட்டமிட்டுள்ளது. அதற்கான விபரத்தை பிரபுவிடம் ஏற்கனவே கூறிய நிறுவனம், படப்பிடிப்பை கும்பகோணத்தில் வைத்துவிட்டு பிரபுவை அழைத்த போது, அவர் செட் போட்டு எடுத்துக்கொள்ளலாமே!, என்று யோசனை சொல்லியிருக்கிறார். ஆனால், விளம்பர படத்தின் இயக்குநரோ, கும்பகோணத்தில் லைவாக எடுத்தால் தான் நன்றாக இருக்கும் என்று கூறியதால், அதை மறுக்க முடியாத பிரபு, தனக்கு தனி பிளைட் கொடுத்தால் தான் கும்பகோணத்திற்கு வருவேன், என்று கூறியுள்ளார்.

 

ஆனால், பிரபுவின் இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட கல்யாண் ஜுவல்லர்ஸ், அவருக்கு தனி பிளைட்டில் டிக்கெட் போட்டு கும்பகோணம் அழைத்துச் சென்று படப்பிடிப்பை நடத்தியுள்ளார்கள்.

Related News

1984

விஜய் 63 படப்பிடிப்பு சென்னையில் தொடங்குகிறது! - எங்கு தெரியுமா?
Saturday January-19 2019

’சர்கார்’ வெற்றியை தொடர்ந்து விஜய் அட்லீ இயக்கும் படத்தில் நடிக்கிறார்...

‘இளையராஜா 75’ நிகழ்வில் ரஜினி, கமல் பங்கேற்பது உறுதியானது!
Saturday January-19 2019

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், வருகிற பிப்ரவரி 2 மற்றும் 3 தேதிகளில் YMCA நந்தனத்தில் 'இளையராஜா 75' விழாவை நடத்தவுள்ளது...

மகனை நடிகராக்கிய இயக்குநர் மோகன் ராஜா!
Saturday January-19 2019

தயாரிப்பாளராகவும், எடிட்டராகவும் பல வெற்றிகளை கொடுத்திருக்கும் எடிட்டர் மோகன், தனது மூத்த மகன் மோகன் ராஜாவை இயக்குநராகவும், இளைய மகன் ஜெயம் ரவியை நடிகராகவும் கோலிவுட்டில் களம் இறக்கியது போல, அவர்களும் தங்களது வாரிசுகளை சினிமா களத்தில் இறக்கியுள்ளார்கள்...

Recent Gallery