சினிமா, சின்னத்திரை என்று இரண்டிலும் பிரபலமாக இருக்கும் காமெடி நடிகர் தாடி பாலாஜி, தற்போது முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் முன்னணி தொகுப்பாளராக இருக்கிறார். கடந்த வருடம் இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே நடந்த பிரச்சினை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தாடி பாலாஜி குடித்துவிட்டு தினமும் தன்னை சித்ரவதை செய்வதாக புகார் கூறிய நித்யா, ஜாதியை குறித்து பேசியும் தன்னை கொடுமைப் படுத்துவதாகவும் கூறியிருந்தார்.
மேலும், தாடி பாலஜி நித்யாவையும் அவரது குழந்தையையும் டார்ச்சர் செய்வது போன்ற வீடியோ ஒன்றையும் நித்யா வெளியிட்டிருந்தார். அதே சமயம், நித்யா குறித்தும் பல திடுக்கிடும் தகவல்களை கூறிய தாடி பாலாஜி, அவர் சில ஆண் நண்பர்களுடன் ஊர் சுற்றுவதாகவும் கூறியிருந்தார். பிறகு போலீஸ் இவர்களது பிரச்சினையில் தலையிட்டதால், ஒருவரை பற்றி ஒருவர் புகார் கூறிவந்ததை நிறுத்துவிட்டு, தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், தாடி பாலாஜி மொத்த பிரச்சினை குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில், என் மனைவி மீது நான் வைத்த காதலே எல்லா பிரசினைக்கும் காரணம். அவர் கல்யாணத்துக்கு பிறகு ஜாலியாக இருக்க வேண்டும் என்று அவருக்கு நிறைய சுதந்திரம் கொடுத்தேன். ஆனால் அதை தவறாக பயன்படுத்தி இவ்வளவு பிரச்சினைகளை நிகழ்த்திவிட்டார்.
அவருக்கும், ஜிம் டிரைனர் பாசில் என்பவருக்கும் தவறான தொடர்பு இருக்கிறது, அதை நான் கண்டித்து நிறை முறை அவரிடம் கூறியிருக்கிறேன். அதற்கான ஆதாரமும் நிறைய இருக்கிறது, சம்பவங்களும் இருக்கின்றன, என தெரிவித்துள்ளார்.
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...
எம்.பி.என் மூவிஸ் சார்பில் எம்...
பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி, இறுதி போட்டியில் ஈரானை வீழ்த்தி தங்கம் வென்றது...