Latest News :

'மன்னர் வகையறா' வெற்றியை தொடர்ந்து விமலை தேடிவந்த 5 படங்கள்...!
Tuesday February-13 2018

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் பூபதி பாண்டியன் இயக்கத்தில் விமல் நடித்திருந்த ‘மன்னர் வகையறா’ படம் வெளியானது. குடும்ப உறவுகளின் மேன்மையை கலகலப்பான பொழுபோக்கு அம்சங்களுடன் சொல்லியிருந்த இந்தப்படம் வெற்றிகரமாக மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. 

 

அதுமட்டுமல்ல ஒரு படத்தின் ஆயுட்காலம் முதல் வாரத்துடன் முடிந்துவிடுகிற இந்த கடினமான சூழலில் இப்போதும் சுமார் 50 தியேட்டர்களில் ‘மன்னர் வகையறா’ ஓடிக்கொண்டு இருப்பதே இந்தப்படத்தின் வெற்றிக்கு முக்கியமான சான்று. இதனால் அளவற்ற மகிழ்ச்சியிலும் உற்சாகத்திலும் இருக்கிறார் விமல் 

 

“இந்தப்படம் நிச்சயம் எனக்கு வெற்றிப்படமாக அமையும், அதன்பின் தான் புதிய படங்களை ஒப்புக்கொள்வேன்” என்று சொல்லி இந்தப்படத்திற்கு தனது முழு உழைப்பயும் தந்து காத்திருந்தார் விமல்... அவரது காத்திருப்பு வீண்போகவில்லை.. 

 

ஆம்.. ‘மன்னர் வகையறா’ வெற்றியை தொடர்ந்து விமல் 5 படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.. 'வெற்றிவேல்' இயக்குனர் வசந்தமணி, ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் அசோக், குறும்பட இயக்குனர் விஜய் உட்பட இன்னும் இரண்டு இயக்குனர்களின் படங்களில் நடிக்கவுள்ளார்.

 

இதுதவிர சற்குணம் டைரக்சனில் ‘K2’ படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இன்னொரு பக்கம் விமல், வரலட்சுமி ஜோடியாக நடித்துவரும் ‘கன்னிராசி’ படம் வரும் மார்ச் மாதம் ரிலீஸாக இருக்கிறது. ஆக இந்த வருடம் அடுத்தடுத்து விமலின் படங்கள் வெளியாக இருக்கின்றன.

 

இதற்குத்தானே ஆசைப்பட்டீர்கள் விமல்..?

Related News

1987

’மாரீசன்’ படத்தின் டிரைலர் வெளியானது!
Tuesday July-15 2025

சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் 98 ஆவது படத்தை இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்க, தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு - பகத் பாசில் இணைந்து நடித்திருக்கும் 'மாரீசன்'  திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது...

இப்போது சினிமா உண்மையிலேயே மிக மோசமாக இருக்கிறது - ஆர்.வி.உதயகுமார் கவலை
Tuesday July-15 2025

எம் என் ஆர் பிக்சர்ஸ் சார்பில், எம் நாகரத்தினம் தயாரித்து நடிக்க, இயக்குநர் எஸ் மோகன் எழுதி இயக்க, கிராமத்துக் கதைக்களத்தில் அருமையான கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள படம், வள்ளிமலை வேலன்...

சிம்புவின் சக்திவேல் கதாபாத்திரத்தை நினைவில் வைத்து தான் நடித்தேன் - நடிகர் டீஜே
Tuesday July-15 2025

ஸ்ரீ கிருஷ்ணா புரொடக்ஷன்ஸ் இன் "உசுரே" திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ லான்ச் இன்று பிரசாத் லேப் திரை அரங்கில் வெகு விமர்சையாக நடைபெற்றது...

Recent Gallery