மறைந்த இயக்குநர் கே.பாலசந்தர், பல வெற்றிப் படங்களை இயக்கியது போல தனது கவிதாலயா திரைப்பட தயாரிப்பு நிறுவனம் மூலம் பல வெற்றிப் படங்களை தயாரித்திருக்கிறார். ரஜினிகாந்த், கமல், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து பல படங்களை தயாரித்திருக்கும் இந்நிறுவனம் வங்கியில் வாங்கிய கடனை செலுத்த முடியாததால், ஏலத்திற்கு வந்திருப்பதாக நேற்று தகவல் வெளியானது.
இதையடுத்து பல ஊடகங்களில் இந்த செய்தி வேகமாக பரவி வந்த நிலையில், கவிதாலயா நிறுவனம் சார்பில், ஏலம் குறித்து இன்று விளக்கம் அளிக்கப்பட்டது.
அதில், கவிதாலயா நிறுவனம் வங்கியில் கடன் வாங்கியிருப்பது உண்மை தான், என்றாலும் நிறுவனம் ஏலத்திற்கு வரவில்லை, அது தவறான செய்தி.
நிறுவனத்தின் மீது வங்கியில் உள்ள கடன் தொகையை ஒரே செட்டிமெண்டில் கொடுப்பதற்காக பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் கடன் அடைக்கப்பட்டுவிடும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...
எம்.பி.என் மூவிஸ் சார்பில் எம்...
பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி, இறுதி போட்டியில் ஈரானை வீழ்த்தி தங்கம் வென்றது...