சுந்தர்.சி இயக்கத்தில் விமல், சிவா, அஞ்சலி, ஓவியா, சந்தானம் ஆகியோரது நடிப்பில் வெளியான ‘கலகலப்பு’ மிகப்பெரிய வெற்றிப் பெற்றதை தொடர்ந்து, ‘கலகலப்பு-2’ வை சுந்தர்.சி இயக்கினார். ஜீவா, ஜெய், சிவா, கேத்ரின் தெரசா, நிக்கி கல்ராணி ஆகியோரது நடிப்பில் கடந்த வாரம் வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.
தமிழகம் மட்டும் இன்றி பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளிளும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்று, வியாபார ரீதியாகவும் வெற்றிகரமாக இப்படம் ஓடிக்கொண்டிருப்பது, சுந்தர்.சி உள்ளிட்ட ‘கலகலப்பு-2’ படக்குழுவினரை பெரும் சந்தோஷமடைய செய்துள்ளது.
இந்த நிலையில், கலகலப்பு படத்தின் மூன்றாம் பாகத்தை எடுக்கும் முனையிப்பில் சுந்தர்.சி ஈடுபட்டுள்ளார். தனியார் தொலைக்காட்சியில் சமீபத்தில் ‘கலகலப்பு-2’ படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட சுந்தர்.சி, கலகலப்பு மூன்றாம் பாகம், நான்காம் பாகம் என்று தொடர்ந்து எடுப்பேன், என்று கூறினார். மேலும், ‘கலகலப்பு-3’ யில் ஜீவா, ஜெய் கூட்டணியோடு மிர்ச்சி சிவாவும் இணைந்து நடிப்பார் என்றும் அவர் கூறினார்.
நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...
நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு தமிழ் சினிமா எப்போதும் வரவேற்பு கொடுக்கும்...
டாவ்ன் (Dawn Pictures) தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், உருவாகியுள்ள பிரம்மாண்டத் திரைப்படம் ‘பராசக்தி’...