விஜய், அஜித் ஆகியோருக்கு அடுத்ததாக, சிறப்பான ஓபனிங் உள்ள நடிகராக உள்ள சிவகார்த்திகேயனின் படம் ஒன்று பூஜை போடுவதற்கு முன்பாகவே வியாபரமாகியுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தற்போது பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இப்படத்தில் ஹீரோயினாக சமந்தா நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்க, இப்படத்திற்குப் பிறகு ‘இன்று நேற்று நாளை’ பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்க உள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை 24 ஏம்.எம்.ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்திற்கு பூஜை கூட இன்னும் போடவில்லை. தற்போது முதற்கட்ட பணிகள் மட்டுமே தொடங்கப்பட்டுள்ள நிலையில், இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது. இது குறித்து சன் தொலைக்காட்சி தனது இணையத்தில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...
நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு தமிழ் சினிமா எப்போதும் வரவேற்பு கொடுக்கும்...
டாவ்ன் (Dawn Pictures) தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், உருவாகியுள்ள பிரம்மாண்டத் திரைப்படம் ‘பராசக்தி’...