Latest News :

நடிகர் மாஸ் ரவி இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘அன்லாக்’ குறும்படம்!
Wednesday February-14 2018

உள்ளங்கையில் உலகத்தை வைத்திருப்பது போல தான் ஆகிவிட்டது செல்போன் வைத்திருப்பவர்களின் நிலை. அந்த அளவுக்கு தொழில்நுட்பத்தின் உச்சமாக மாறியுள்ள செல்போனை பேசுவதற்கு மட்டும் இன்றி, பலவற்றுக்காக மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். சிலர் நல்ல மனபான்மையுடன் செல்போனை பயன்படுத்தினாலும், சிலரோ தவறான மனப்பான்மையுடனும் பயன்படுத்துவது அதிகரித்துக் கொண்டு தான் வருகிறது. அப்படிப்பட்ட செல்போன்  தவறுதலாகத் தொலைந்து விட்டால், வேறு எவரும் தகவல்களை அறிந்து கொள்ளக் கூடாது என்று எல்லாவற்றையும் ‘லாக்’ செய்து வைத்திருப்பார்கள் . அதில்  பாஸ்வேர்டு தெரிந்த  செல்போனை உரிமையாளர் தவிர வேறு யாரும் பயன்படுத்த முடியாதபடி கால் செய்யும் வசதியையும் லாக் செய்திருப்பார்கள்.

 

மொபைல் வைத்திருக்கும் உரிமையாளருக்கு ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்து அவருக்கு உதவும் எண்ணத்தில் மொபைல் போனை எடுத்து தொடர்பு கொள்ள முயன்றால் அது லாக் ஆகியிருக்கும். இதனால் சம்பந்தப்பட்டவர் வீட்டுக்கு தொடர்பு கொள்ள முடியாது.  சில நேரம்  அவர் யாரென்று  தெரியாமல் அவரது உயிரைக் காப்பாற்றக்கூட முடியாமல் போய் விடும். இப்படிப்பட்ட கருத்தை மையமாக வைத்துத்தான் 'அன்லாக்' குறும்படம்  எடுக்கப்பட்டுள்ளது.

 

இப்படத்தை இயக்கியிருப்பவர்  மாஸ் ரவி. இவர் திரைப்பட நடிகர் .அண்மையில் வெளிவந்த விக்ரமின் ' ஸ்கெட்ச் ' படத்தில் கூட முக்கியமான வேடமேற்று நடித்துள்ளார். இசை - கிறிஸ்டி, ஒளிப்பதிவு - சரண் மணி, படத்தொகுப்பு - ஸ்ரீ ராஜ் குமார், டிசைன் - சரத்குமார், இனை தயாரிப்பு - பூபாலன். லைக் அண்ட் ஷேர் மீடியா சார்பில் இதைத் தயாரித்து இருப்பவர் பிரபல மக்கள் தொடர்பாளர் சக்தி சரவணன்.

 

இக்குறும்படத்தில்  மாஸ் ரவி, நடிகர் நாகா, நடிகர் ஆல்வின், சக்தி சரவணன், பாண்டியன் மற்றும் பலர் நடித்துள்ளனர். சென்னை நகரின் ஜன சந்தடியுள்ள போக்குவரத்து நெருக்கம் உள்ள இடங்களில் சிரமப்பட்டுப் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். 

 

சில நிமிடங்கள் ஓடும்  'அன்லாக்' குறும்படம் பார்ப்பவர்களை நெடுநேரம் யோசிக்க வைக்கும். செல்போனில் எதை மூடி வைக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வு ஊட்டும். இதை  படிப்பினையூட்டும்  குறும்படம்  என்றும் கூறலாம்.

 

'அன்லாக் 'குறும்படத்தின் பர்ஸ்ட் லுக் கை 'ஸ்கெட்ச்' படத்தின் இயக்குநர் விஜய் சந்தர் வெளியிட்டார்.

Related News

1993

கதை தேர்வு மூலம் வியக்க வைக்கும் அர்ஜூன் தாஸ்!
Saturday September-13 2025

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...

சக்தி ஃபிலிம் பேக்டரி நிறுவனத்துடன் வெற்றியை கொண்டாடிய ‘காந்தி கண்ணாடி’ படக்குழு!
Saturday September-13 2025

இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...

விஜய் ஆண்டனி என் குடும்பத்தில் ஒருவர் - ஷோபா சந்திரசேகர் பெருமிதம்
Saturday September-13 2025

விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...

Recent Gallery