இந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் நடித்து வரும் நடிகை தமன்னா, தற்போது ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு காட்ட தொடங்கியுள்ளார். சிவராத்திரியை முன்னிட்டு அவர் நேற்று ஈஷா யோக மையத்தில் சத்குருவுடன் இணைந்து சிறப்பு வழிபாடுகளை செய்துள்ளார்.
தமிழகம் முழுவதும் நேற்று முதல் மஹா சிவராத்திரி சிறப்பு வழிபாடுகள் நடந்து வருகின்றது. நேற்று இரவு நான்கு கால அபிஷேக ஆராதனை சிவனுக்கு நடந்தது. மஹா சிவராத்திரியை முன்னிட்டு கோவை அருகே வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோக மையத்தில் சிறப்பு வழிபாடுகள், நடன நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் லட்சக்கணக்கான பகதர்கள் கலந்துக் கொண்டார்கள்.
இந்த சிறப்பு வழிபாடுகளில் நடிகை தமன்னா கலந்துக்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்குருவுடன் இணைந்து சிவராத்திரியில் தமன்னா சிறப்பு வழிபாடு செய்ததோடு, அங்கு நடைபெற்ற நடன நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்றுள்ளார்.
இது குறித்து, தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள தமன்னா, “சத்குரு அவர்களுடன் நானும் ஈஷா யோக மையத்தில் நடந்த சிறப்பு மஹா சிவராத்திரி வழிபாடுகளில் கலந்து கொண்டேன். இது எனக்கு ஒரு மேஜிக்கல் அனுபவம் போல் இருந்தது. அங்கிருந்த ஒவ்வொரு நிமிடத்தையும் நான் ரசித்து, அனுபவித்தேன். அங்கு பணியாற்றியவர்களை நான் குறிப்பிட்டே ஆக வேண்டும். எந்த வித சுயநலமும் இல்லாமல், சிறப்பான வழிபாடுகளை செய்து இருந்தனர். நினைத்து கூட பார்க்க முடியவில்லை. சத்குருவுக்கு எத்தனை நன்றிகள் கூறினாலும் போதாது, நினைவில் நிற்கும் சிவராத்திரியாக எனக்கு அமைந்துவிட்டது.” என்று தெரிவித்துள்ளார்.
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...
எம்.பி.என் மூவிஸ் சார்பில் எம்...
பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி, இறுதி போட்டியில் ஈரானை வீழ்த்தி தங்கம் வென்றது...