கேரள திரைப்படங்களும், திரைப்பட பாடல்களும் அவ்வபோது வைரலாக பரவி வருகிறது. பிரேமம் திரைப்படத்தை தொடர்ந்து ஜிமிக்கி கம்மல் என்ற பாடல் மிக வைரலான நிலையில், தற்போது பிரியா வாரியர் என்ற நடிகை தனது புருவ அசைவால், பல கோடி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
‘ஒரு அடாரு லவ்’ என்ற மலையாளப் படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றை, காதலர் தினத்தை முன்னிட்டு வெளிட்டுள்ளனர். கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி படக்குழுவினரால் வெளியிடப்பட்ட “மாணிக்ய மலராய பூவி” என தொடங்கும் அந்த பாடலை வினீத் ஸ்ரீனிவாசன் பாடியிருக்கிறார்
ஒரு பள்ளியில் நடக்கும் கலை நிகழ்ச்சியின் போது மாணவர்கள் கூடியிருக்க, அப்போது தனது நண்பனை பார்த்து இரு புருவங்களையும் உயர்த்தியபடி பார்க்கும் பிரியாவின் பார்வையும், அவர் புருவத்தை உயர்த்தும் விதமும் சமுக வலைதளங்களில் வைரலாக் பரவி வருகிறது.
சில நொடிகள் ஓடும் அந்த வீடியோவை இதுவரை ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் பார்த்திருக்கிறார். தற்போது யூடியூபில் டிரெண்டான வீடியோக்களில் முதலிடத்தில் உள்ள அந்த வீடியோவால், பிரியா வாரியருக்கு தனி ரசிகர்கள் பட்டாளேமே உருவாகியுள்ளது. கேரளா மட்டும் இன்றி தமிழகம், ஆந்திரா என தென்னிந்தியா முழுவதும் பிரியா வாரியர் பிரபலமாகியுள்ளார்.
இந்த நிலையில், பிரியா வாரியர் மீது ஐதராபாத் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ”மாணிக்க மலராய பூவி..” பாடல் வரிகள் இஸ்லாமியர்களின் மனதை புன்படுத்துவதாக கூறி, பிரியா வாரியர் மற்றும் இயக்குநர் மீது ஐதராபாத் நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...
நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...
நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு தமிழ் சினிமா எப்போதும் வரவேற்பு கொடுக்கும்...