வரும் பிப்ரவரி 21 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் உள்ள மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவு இல்லத்தில் தனது புதிய அரசியல் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை வெளியிட கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார். இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், கமல்ஹாசன் சினிமாவுக்கு முழுக்கு போடவும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
’விஸ்வரூபம்-2’, ‘சபாஷ் நாயுடு’ ஆகியப் படங்களில் நடித்து வரும் கமல்ஹாசன், ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியந்2’ படத்தில் நடிக்க இருக்கிறார். தற்போது ‘விஸ்வரூபம்-2’ வெளியீட்டுக்கு தயாராக உள்ள நிலையில், ‘சபாஷ் நாயுடு’ படமும் முடியும் தருவாயை எட்டியுள்ளது.
இந்த நிலையில், ’இந்தியன் - 2’ படத்தின் சில காட்சிகளையும் கமல்ஹாசன் படமாக்கிவிட்டதாக கூறப்படுகிறது. அதே சமயம், தீவிர அரசியலில் ஈடுபடும் கமல்ஹாசன், சினிமாவில் நடிப்பதை தவிர்க்க முடிவு செய்துள்ளாராம். அதனால், ‘இந்தியன் 2’ படத்தை தனது கடைசிப் படமாக அவர் அறிவிக்க இருக்கிறாராம்.
விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...
நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...
நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு தமிழ் சினிமா எப்போதும் வரவேற்பு கொடுக்கும்...