வறுமையில் வாடிய ரங்கம்மாள் பாட்டிக்கு உதவிய தென்னிந்திய நடிகர் சங்கம்!
Wednesday February-14 2018

தமிழில் பல்வேறு திரைப்படங்களில் பாட்டியாக நடித்து புகழ் பெற்றவர் திருமதி ரங்கம்மாள் பாட்டி. இவர் தமிழ் திரைப்படங்களில் அவ்வபோது சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து அதன் மூலம் வரும் 500 ரூபாயை கொண்டு குடும்பத்தை நடத்தி வந்தார். சில நாட்களுக்கு முன்பு ரங்கம்மாள் பாட்டி மெரீனா கடற்கரையில் பிச்சை எடுத்து வந்ததாக செய்தி ஒன்று பரவி வந்தது. 

 

இந்த தகவல் அறிந்த தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள். அவரை பற்றி விசாரித்து மெரினா கடற்கரைக்கு பாட்டியை தேடி சென்றனர். அங்கே சென்ற போது தான் ரங்கம்மாள் பாட்டி பிச்சை எடுக்கவில்லை என்பதும். படபிடிப்பு தளத்தில் அவருக்கு கிடைத்த 500 ருபாய் போதாததால் மெரினா கடற்கரையில் Ear Phones போன்ற Electronic பொருட்களை அங்கே விற்று அதன் மூலம் வரும் வருவாயை கொண்டு வாழ்கையை நடத்தி வந்திருக்கிறார் என்பதும் தெரியவந்துள்ளது. எனவே தென்னிந்திய நடிகர் சங்கம் அவருக்கு உதவி தொகையாக ரூபாய் 5000 வழங்கியது. 

 

ரங்கம்மாள் பாட்டி FEFSI அமைப்பின் கீழ் உள்ள ஜூனியர் ஆர்டிஸ்ட் சங்கத்தின் உறுப்பினர். ஒருவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினராக இருந்தால் மட்டும் தான் சங்கத்தின் மூலம் அவருக்கு உதவி தொகையை வழங்க முடியும். ஆனால் பாட்டியின் வறுமையை கருத்தில் கொண்டு தென்னிந்திய நடிகர் சங்கம் அவருக்கு இந்த உதவியை செய்துள்ளது. மேலும் அவருக்கு எந்த வகையில் உதவலாம் என்பதை நடிகர் சங்க நிர்வாகிகள் ஆலோசித்து வருகிறார்கள்.

 

இதை போன்று மருத்துவ உதவி இல்லாமல் தவித்துவந்த நடிகை பிந்துகோஷ்க்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ரூபாய் 5000 உதவி தொகையாக சென்ற வாரம் வழங்கியது. நடிகை பிந்துகோஷ் தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர் அல்ல. இருந்தாலும் அவரது தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு அவரை உறுப்பினராக இலவசமாக சங்கத்தில் சேர்த்து இந்த உதவி தொகையை வழங்கியுள்ளது. மேலும் அவருக்கு ஓய்வூதியம் வழங்குவது பற்றியும் தென்னிந்திய நடிகர் சங்கம் ஆலோசித்து வருகிறது.


Related News

1997

’தாய் கிழவி’ மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் - சிவகார்த்திகேயன்
Wednesday March-11 2026

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...

உண்மை சம்பவத்தை இரத்தமும் சதையுமாக சொல்லும் ‘மனிதன் தெய்வமாகலாம்’!
Tuesday March-10 2026

வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...

நயன்தாராவை கெளரவித்த ‘பேட்ரியாட்’ படக்குழு!
Tuesday March-10 2026

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில்  நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...

Recent Gallery