பிரகாஷ் ராஜ் - லலிதாகுமாரி தம்பதியினர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். பிரகாஷ் ராஜ் தற்போது பாலிவுட் நடன இயக்குநரை திருமணம் செய்துக் கொண்டு அங்கேயே செட்டிலாகிவிட்டார். தனது குழந்தைகளுடன் வசித்து வரும் லலிதாகுமரி, திரைப்படங்கள் எதிலும் நடிக்கவில்லை என்றாலும், தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் குழுவில் இடம்பெற்றிருக்கிறார்.
இந்த நிலையில், போதிய வருவாய் இல்லாமல் இருக்கும் நடிகை லலிதாகுமாரி கடந்த சில மாதங்களாக பணத்திற்காக ரொம்பவும் கஷ்ட்டப்பட்டு வந்திருக்கிறார். இதனை அறிந்த பிரகாஷ் ராஜ், விரைவில் தமிழில் வர உள்ள தொலைக்காட்சி ஒன்றில் சீரியல் தயாரிப்பதற்கு லலிதாகுமாரிக்கு நிதியுதவி அளித்திருப்பதோடு, தொலைக்காட்சியிடம் ஸ்லாட் ஒதுக்க பரிந்துரையும் செய்துள்ளார்.
இதன் மூலம் சீரியல் தயாரிப்பாளராகியுள்ள லலிதாகுமாரிக்கு, சீரியல் தயாரிப்பதன் மூலம் மாதத்திற்கு கணிசமான வருவாய் கிடைக்கும். திருமணம் முறிந்து விவாகரத்து ஆன பிறகும், தனது முன்னாள் மனைவியின் கஷ்ட்டத்தைப் போக்க பிரகாஷ் ராஜ், செய்த காரியத்தால், திரையுலகத்தினர் அவரை பாராட்டி வருகிறார்கள்.
விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...
நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...
நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு தமிழ் சினிமா எப்போதும் வரவேற்பு கொடுக்கும்...