அரவிந்த்சாமி நடிப்பில் உருவாகி வரும் ‘வணங்காமுடி’ படத்திற்காக ரூ.30 லட்சம் மதிப்பில் மதுக்கூடம் (பப்) ஒன்றை படக்குழுவினர் வடிவமைத்துள்ளனர்.
மேஜிக் பாக்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், செல்வா இயக்கும் இப்படத்தில் ரித்திகா சிங், நந்திதா, சிம்ரன் ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். பிரம்மாண்டமான முறையில் உருவாகி வரும் இப்படத்தின் முக்கிய இடத்தில் வரும் பப் பாடல் ஒன்றுக்காக, ரூ.30 லட்சத்தில் பிரம்மாண்டமான பப் ஒன்றை படக்குழுவினர் வடிவமைத்துள்ளனர்.
டி.இமான் இசையில் உருவாகியுள்ள இந்த பாடலுக்கு தினேஷ் நடனம் அமைத்து வருகிறார். இதில் நந்திதா நடனம் ஆடிக்கொண்டிருக்க, அரவிந்த்சாமி ஏதோ ஒரு முக்கிய விஷயத்தை சீரியஸாக தேடிக் கொண்டிருப்பது போல் பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. இதற்கான அந்த பப் செட் சென்னை பிலிம் சிட்டியில் போடப்பட்டுள்ளது.
’கைதி’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ், தற்போது நாயகனாக பலதரப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்று வருகிறார்...
சன்லைட் மீடியா எழுமலை ஏ.எஸ்...
லவ் பிலிம்ஸ் வழங்கும் லவ் ரஞ்சன் மற்றும் அங்கூர் கார்க் தயாரிப்பில் பிரபல இயக்குநர் ஜி...