வெங்கர் பிரபு இயக்கத்தில் ‘பார்ட்டி’ படத்தை தயாரித்து வரும் அம்மா கிரியேசன்ஸ் டி.சிவா, அப்படத்தை தொடர்ந்து ‘சார்லி சாப்ளின் 2’ படத்தையும் தயாரித்து வருகிறார். ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரம்மாண்டமான முறையில் உருவாகி வரும் இப்படத்தில் பிரபு தேவா ஹீரோவாக நடிக்க, பிரபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நாயகிகளாக நிக்கி கல்ராணி, அதாஷர்மா இருவரும் நடிக்கிறார்கள்.
பிரபல இந்தி தெலுங்கு நடிகையான ஆதாஷர்மா தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இது. மற்றும் ரவி மரியா, செந்தில், ஆகாஷ், விவேக் பிரசன்னா, சாம்ஸ், சாந்தா, மகதீரா வில்லன் தேவ்கில், மும்பை வில்லன் சமீர் கோச், கோமல் சர்மா, அமீத் ஆகியோர் நடிக்க, இவர்களுடன் சிறப்பு தோற்றத்தில் வைபவ் நடிக்கிறார்.
செளந்தர்ராஜன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அம்ரீஷ் இசையமைக்க, யுக்பாரதி, பிரபுதேவா ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். ஆர்.கே.விஜய் முருகன் கலைத் துறையை கவனிக்க, ஜானி நடனம் அமைக்கிறார். பென்னி எடிட்டிங்கை கவனிக்க, கனல் கண்ணன் ஸ்டண்ட் காட்சிகளை வடிவமைக்கிறார்.
முழுக்க முழுக்க கமர்ஷியல் காமெடி படமாக உருவாகும் ‘சார்லி சாப்ளின் 2’ படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இதன் படப்பிடிப்பு கும்பகோணத்தில் நடைபெற்றது. அதில், பிரபுதேவா, மகதீரா வில்லன் தேவ்கில் இருவரும் மோதும் பயங்கர சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது. அத்துடன் பிரபுதேவா - சமீர் கோச் இருவரும் மோதும் சூட்கேஸ் சண்டைக் காட்சி ஒன்றும், அங்கேயே பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு அதில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த பிரம்மாண்ட சண்டைக்காட்சிகள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெறும் வகையில் படமாக்கப்பட்டுள்ளதாம்.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...