‘சுப்பிரமணியபுரம்’ படத்தின் மூலம் நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என்று மூன்று அவதாரங்களை ஒரே சமயத்தில் எடுத்த சசிகுமார், தொடர்ந்து ஹீரோவாக சில வெற்றிப் படங்களைக் கொடுத்தாலும், இயக்குநராக தனது இரண்டாவது படத்தில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தார். பிறகு படம் இயக்குவதை நிறுத்திவிட்டு தயாரிப்பு மற்றும் நடிப்பு என்று இருந்தவர், பாலுமகேந்திராவுக்காகவும், பாலாவுக்கும் சில படங்களை தயாரித்தார்.
சசிகுமார் தயாரித்த படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்ததால் அவர் பெரும் கடனாளியாகிவிட்டார். அவர் வாங்கிய கடன் தான், அவரது உறவினரும் தயாரிப்பாளருமான அசோக் குமார் என்பவரை காவு வாங்கிவிட்டது. அசோக் குமாரின் மரணத்தால் சசிகுமாருக்கு கடன் கொடுத்த அன்பு செழியன் தலைமறைவானாலும், சசிகுமாரை கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து நெருக்க ஆரம்பித்துள்ளனர். இதை அறிந்த சமுத்திரக்கனி சசிகுமாருக்கு எப்படியாவது உதவி செய்ய வேண்டும் என்பதற்காக, சசிகுமாருக்கு இருந்த ரூ.18 கோடி கடனை சமுத்திரக்கனி கொடுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடன் தொல்லையால் சசிகுமாரி கஷ்ட்டப்படுவதை அறிந்து அவருக்கு யாருதும் உதவி செய்ய முன் வராத நிலையில், சமுத்திரக்கனி தன்னிடம் இருந்த பணத்தை அவருக்கு கொடுத்து உதவி செய்துள்ளார். அதே சமயம், சமுத்திரக்கனியின் இயக்கத்தில் ‘நாடோடிகள் 2’ படத்தில் நடித்து வரும் சசிகுமார், இப்படத்திற்கு பிறமும் சமுத்திரக்கனி இயக்கத்தில் மற்றொரு படத்திலும் நடிக்க இருக்கிறாராம்.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...